பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 19.3 இசக்கிமுத்துவும் நல்லமுத்துவும் தேநீர் குடித்து முடிந்ததும் பழைய கள் குடித்த ஞாபகத்தில் மீசையை ஒதுக்கி விட்டுக் கொண்டே தங்களுடைய குடிசைகளை நோக்கி நடந்தனர். & 4 அந்த சமயத்தில் மருக்கொழுந்து என்னும் வையம் பெறும் வழங்கோசை எங்கிருந்தோ வந்து, அவர்களுடைய காதில் கணிரென்று விழுந்தது. அந்த ஒசையைத் தொடர்ந்து மருக்கொழுந்தின் வாசமும் வந்தது. அடுத்த விநாடி அவர் களுக்கு எதிரே மருக்கொழுந்து கூடைக்காரி ஒருத்தி, இட்ட அடி நோக ஆனல் எடுத்த அடி கொப்புளிக்காமல் வட்டில் சுமந்து மருங்கசைய வந்துகொண்டிருந்தாள். அவளே வழி மறித்து நிறுத்தி, ' என்ன புள்ளே இந்த மருக்கொழுந்து வாசம் உன்மேலேயிருந்து வீசுதா ? இல்லே, மருக்க்ொழுந்திலே யிருந்துதான் வீசுதா? ' என்று கேட்டான் இசக்கிமுத்து. " எப்படி வேனுமானலும் வச்சுக்கேன் ! என்று இடை யிலிருந்த கூடையை எடுத்து அவனுக்கு எதிரே நீட்டினுள் அவள். உடனே இசக்கிமுத்து பத்துபைசாவுக்கு மருக்கொழுந்து வாங்கித் தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டு, நல்லமுத் தைப் பார்த்துக் கண் சிமிட்டினன். " என்ன அண்ணே, உனக்கும் சோக்குப் பொறந்துடிச்சிப் போல இருக்குது ' என்ருன் நல்லமுத்து. நல்லாயிருக்குது அண்ணே, நீ சொல்றது ! நான் மட்டும் என்ன, உனக்கு மனுசனகத் தோணலையா? ' ' என்னியிலேருந்து நீ மனுசனனே, கள்ளுக்கடையை எடுத்த நாளிலேயிருந்துதானே ? : - நீ மட்டும் அதுக்கு முன்னலேயே மனுசயிைருந்தியா? போ அண்ணே, போ! வெளியே சொன்ன வெக்கக் கேடு ; அழுதாத் துக்கக்கேடு. நம்ம அழகை நாமே எடுத்துச் சொல்லிக் கனுமாக்கும்? சரி அண்ணே, நானும் மருக்கொழுந்து வாங்கிக்கிறேன். எனக்கும் சோக்குப் பொறக்கட்டும் ' என்று சொல்லிக் கொண்டே நல்லமுத்தும் பத்து பைசாவுக்கு மருக்கொழுந்து வாங்கித் தன் மடியில் வைத்துக்கொண்டான். இருவரும் மேலே நடந்தனர். சிறிது தூரம் சென்றதும் எங்கிருந்தோ சாராய நெடி குப் பென்று வந்து அவர்களுடைய மூக்கைத் துளைத்தது. கா-13