பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 யாருக்கு விரோதி ? உருளும்-ஆமாம், கபர்தார் 1’ என்று ஒருதடவை ரெண்டு தடவையில்லே, ஒராயிரந்தடவை சொல்லித்தானே கொடுக் கிருரு ? 3 * புழக்கடையிலே தலைகிடந்து உருளும்னு அவரு என்ன இந்த ஊருக்கு ராசாவா ? ' என்று கேட்டான் நல்லமுத்து. சங்கதி தெரியாதுபோலே இருக்குது போனவாரம் அவரு வீட்டுப் புழக்கடையிலே புதுசா ஒரு கிணறு தோண்டினங்களாம். தோண்டத் தோண்ட ஒரே மனுசனுங்க மண்டையும் எலும்புமா வந்ததாம் ! அத்தனைபேரை அவரு அக்கம் பக்கம் தெரியாமே வேலைதீர்த்துப்பிட்டு இருக்காரு, தெரியுமா சங்கதி ? ' என்ருன் பேச்சிமுத்து. இதைக் கேட்டதும் நல்லமுத்துக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்துவிட்டது; அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம் பித்துவிட்டான். இசக்கிமுத்துவுக்கு அவன் சிரித்தது பிடிக்கவில்லை. ' உனக்கு எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கும் ! ' என்ருன் அவன். 'நீ கூடவா அண்ணே, அதைநம்பறே ? விசயம் என்னுன்ன, அவரு வீடுஇருந்த இடத்திலே முன்னே இடுகாடு இருந்ததாம். அதுதான் அந்த இடத்திலே எங்கே தோண்டினலும் மனுசனுங்க மண்டையும் எலும்புமா கெடைக்குதாம் ! ’’ என்ருன் நல்ல முத்து. - இருந்தாலும் இருக்கும்; நீ வா, போவோம்!' என்று சொல்லிக்கொண்டே அவர்கள் இருவரும் நடையைக்கட்ட, பேச்சிமுத்து அவர்களுக்குப் பின்னல் பின்னல் நடை நடந்து சென்ருன்,

  1. - # 奖

மறுநாள் மாலை வழக்கம்போல் அங்கொன்றும் இங்கொன்று மாக அந்தக் கிராமத்துக் குடிசைகள் அப்பொழுதுதான் புகைய ஆரம்பித்திருந்தன. அந்தக் குடிசைகளுக்கு முன்னல், அதுவரை பசியை மறப்பதற்காகப் புழுதியில் புரண்டுகொண்டிருந்த குழந்தைகள், கூரைக்குமேலே குபு, குபு வென்று வந்த புகை யைக் கண்டதும் துள்ளி எழுந்து குதி, குதி யென்று குதித் தன- ஆம், அன்றிரவு நிச்சயம் சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைகளை அப்படி ஆட்டி வைத்தது. மாஜி குடியர் களில் சிலர் தேநீர்க்கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்; அவர்களுடைய விழி ' ராஜவிழி யா