பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 197 யிருந்தது. இன்னும் சிலர் திருட்டுச் சாராயம் குடிப்பதற்கா கத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர். அவர் களுடைய விழி திருட்டுவிழி யாயிருந்தது, தலையை வாரிமுடிந்து கொள்ளக்கூட நேரமில்லாத-நேர மிருந்தாலும் விருப்பமில்லாத கிராமத்துப் பெண்களில் பலர், நீர்க்குடத்துடன் கிணற்றடியில் நின்று, தங்களுடைய தரித்தி ரத்தை ஒரளவு மிகையாகவே உருவகப்படுத்தி உலகத்துக்குக் காட்டிக் கொண்டிருந்தனர். மாலை நேரத்துப் புத்துணர்ச்சி அளிக்கும் பானங்க ளுக்குப் பிறகு திண்ணைக் கச்சேரிகளிலும் மரத்தடிக் கச்சேரிகளிலும் கூடி யிருந்த பரசிரம pவிக’ளின் கூச்சலோ பெருங் கூச்சலாயிருந் தது. அவர்களுடைய கூச்சல் பொழுதுவிடிந்ததும் குளக்கரை யில் மல்லாந்து படுத்துவிடும் மழைக்காலத்து மண்டுகங்களின் ஓசை நயத்தோடு கூடிய இரைச்சலை ஒத்திருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறுமாதங்களுக்கு ஒரு முறை காசைக் கண்ணுல் பார்க்கும் அந்தக் கிராமத்துச் 'சுய சிரம, ஜீவிகளோ, களைப்பாற்றும் கஞ்சித்தண்ணி 'ருக்காக அடுப்படியில் காத்துக்கொண்டிருந்தனர். உலர்ந்த வெற்றிலைச் சருகைப்போட்டுக் குதப்புவதிலேயே இந்த உலகத்தையும்-ஏன், சோற்றையும்கூட மறந்துவிடும் கிராமத்துக் கிழவர்களும், கிழவிகளுமோ தங்களுடைய பேரப் பிள்ளைகளை அழைத்துக் கொஞ்சம் வெற்றிலைப் பாக்கு நறுக்கித் தருமாறு வேண்டிக்கொண்டிருந்தனர். மாடும் மனிதனும் ஒன்ருக ஒய்வுபெறும் அந்த வேளையிலே, தன்னுடைய ஆற்றங்கரைப் பங்களாவின் அழகிய வராந்தாவிலே இப்படியும் அப்படியுமாக ராஜ நடை' போட்டுக்கொண்டிருந் தான் நக்கீரன்; கிராமத்தின் ஒரு கோடியில் தனியாகஇருந்த அந்தப் பங்களா வின் முன்னல் அவனுடைய கவனத்தைக் கவருவதற்கு எத்தனையோ காட்சிகள் இருந்தன. எனினும் முதல்நாள் எழுந்த கேள்வி அவனுடைய உள்ளத்தில் ஏனே இன்னும் இடம் பெற் றிருந்தது: х . * சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடி கெடுக்கும் மனுஷன் யாராயிருக்கும்?" அவனுடைய சிந்தனை மேலும் மேலும் விரிந்து கொண்டே சென்றது. அவ்வாறு விரிந்த சிந்தனைக்கு ஒரு முற்றுப்புள்ளி,