பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 யாருக்கு விரோதி ? வைக்கத்தானே என்னவோ, மாஜி குடியன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும், 'யார் அப்பா, நீ?’ என்று கேட் டான் நக்கீரன். 'பேச்சி முத்துங்க! ' என்ருன் வந்தவன். பேச்சிமுத்து என்ற பெயரைக் கேட்டதும் முதல் நாள் தேநீர்க் கடையில் நடந்த உரையாடல் நக்கீரனின் நினைவுக்கு வந்தது. அவன் ஒரு கணம் திடுக்கிட்டான். மறு கணம் இன்னுெரு சந்தேகம் எழவே, ' அது சரி ; உனக்கு இசக்கி முத்தைத் தெரி யுமா?" என்று கேட்டான். தெரியுமுங்க ??? ' நல்லமுத்து ? ’’ தூக்கிவாரிப் போட்டது பேச்சிமுத்துக்கு, " தெரியு முங்க......... ' என்று சொல்ல ஆரம்பித்தவன், தெரியா துங்க! ’’ என்று குழறினன். அந்தப் பயல்கள் ஒரு வேளை ' கபர்தார் ஐயா வைப் பற்றி இந்தப் பிள்ளையாண்டானிடம் சொல்லி விட்டார்களோ, என்னவோ என்ற சந்தேகம் வந்து விட்டது அவனுக்கு. அந்த அப்பாவியின் நிலையை ஒருவாறு உணர்ந்த நக்கீரன் பேச்சை மாற்ற எண்ணி, சரி, இப்போ நீ எதற்காக இங்கே வந்திருக்கிறே? என்று கேட்டான். அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்ட பேச்சி முத்து, ' என்ன சாமி, ஒன்றும் தெரியாத மாதிரிக் கேட்கிறீங் களே! இந்த நேரத்திலே, இப்படிப் பதுங்கிப் பதுங்கிப் பார்த்து முழிச்சுக்கிட்டு வேறே எங்கே வருவேனுங்க ? ' என்ருன். எனக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாது. நான் இந்த ஊருக்குப் புதுசு: நீயே விஷயத்தைச் சொல்லு : ' என்ருன் அவன். பேச்சி முத்துக்கு மீண்டும் சந்தேகம் வந்துவிட்டது. " அப்படின்ன நீங்க யாருங்க ? என்று கேட்டான். இந்த சமயத்தில் உள்ளே யிருந்து வந்த, ஒரு நெடிதுயர்ந்த மனிதர், ' என்னடா பேச்சிமுத்து, இவனை உனக்குத் தெரிய லையா? இவன் தான் என் மகன் நக்கீரன். பட்டணத்திலே படிச்சிகிட்டு இருந்தான்; இப்போ லீவிலே ஊருக்கு வந்திருக் கிருன்!" என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.