பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 199 அப்படியா சாமி, இவரு பட்டணத்திலே படிச்சிக்கிட்டு இருந்தவரா? அதான் இவருக்கு ஒண்ணுமே தெரியல்லே! ’’ என்ருன் பேச்சிமுத்து. ஆமாம், உன்னை நான் புழக்கடைப் பக்கமாகத் தானே வரச் சொன்னேன்? நீ ஏன் இந்தப் பக்கமா வந்தே ? என்று கேட்டார் அந்த ஆஜானுபாகு: - - அந்தப் பக்கமாத்தான் வந்தேன், சாமி 1 அங்கே இந்த நல்லமுத்துப் பய இல்லே. அவன் நின்னுக்கிட்டிருந்தான். அவனுக்கு நம்ம விசயம் தெரிவானேன்னு இப்படி வந்துட் டேன் என்ருன் பேச்சிமுத்து: தெரிஞ்சா என்னடா ? அந்தப்பய உன்னை வெல்லத்திலே வச்சி முழுங்கிடுவான? அந்த மாதிரிச் சோனிப் பயல்களுக் கெல்லாம் நீ ஒண்ணும் பயப்பட வேணும். நாளையிலேயிருந்து நீ புழக்கடைப் பக்கமாவே வா; உன்னைப் போல எத்தனையோ பேர் அந்தப் பக்கமா வரப்போ, நீ மட்டும் இந்தப் பக்கம் வருவா னேன்? “ என்று ஊக்க மூட்டிய வண்ணம் அவனைப் புழக் கடைக்கு அழைத்துச் சென்ருர் அவர். - இப்போதுதான் எப்போது பார்த்தாலும் அங்கே பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒர் அறை நக்கீரனின் ஞாபகத்துக்கு வந்தது. முதல் நாள் இரவு அதைப் பார்த்த போது, அதற்குள் என்ன இருக்கிறது?’ என்பதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்ப வில்லை: இன்று தன்னுடைய தகப்பனர், பேச்சிமுத்தைப் புழக் கடைப் பக்கமாக அழைத்துச் செல்லவே, அந்த அறைக்குள் என்ன இருக்கிறது ? என்பதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினுன்: - ஆனால், தன் மகன் தன்னுடன் வருவதைத் தகப்பனர் விரும்பவில்லை. அவர் அவனைத் தடுத்து நிறுத்தி, 'இதெல்லாம் பெரியவங்க காரியம்; நீ ஒண்ணும் கண்டுக்கிடாதே! போ, போய் உன் வேலையைப் பாரு இல்லாட்டா, ஏதாச்சும் ஒரு புத்தகத்தை எடுத்து வச்சுகிட்டுப் படி 1’ என்ருர். இருக்கட்டும், - அப்பா ! உங்களுடைய வேலையை நானும் தான் கொஞ்சம் பார்க்கிறேனே?' என்ருன் அவன். அப்படின்ன எனக்கும் அது சந்தோசமாத்தான் இருக்கும்; ஆன இந்த விசயம் அக்கம் பக்கம் தெரியக்கூடாது-ஆமாம், கபர்தார்!’ என்று அதே கபர்தாரைச் சொல்லி, அவனை யும் எச்சரித்தார் அவர்;