பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 யாருக்கு விரோதி ? அவன் சிரித்தபடி, அக்கம் பக்கத்திலேதான் யாரும் இல்லையே? ' என்று சொல்லிக் கொண்டே அவர்களைத் தொடர்ந்தான். ஐயோ, இது என்ன ? அங்கே பூட்டியிருந்த அறை திறந்தி ருந்தது. அந்த அறைக்கு முன்னல் பத்துப் பன்னிரண்டு பேர் கூடியிருந்தனர். அதற்குள் போட்டிருந்த ஒரு நாற்காலி யின் மேல் பெரிய ஜாடி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பயங்கர ஆகிருதியுடன் ஒருவன் நின்று கொண்டி ருந்தான். அவனுடைய கையில் ஓர் அளவுக் கிண்ணம் இருந்தது. அந்த ஆசாமி உள்ளே வந்த வாடிக்கைக்காரர்களுக் கெல்லாம் நாட்டுச் சாராயத்தை அளந்து ஊற்றிக் கொண்டிருந் தான். அதாவது, மதுவிலக்குப் பிராந்தியத்தில் அசல் சாராயக் கடை ஒன்று திறந்துவைக்கப்பட்டிருந்தது ! அருவெறுக்கத்தக்க இந்தக் காட்சியைக் கண்டதும் நக்கீர னின் கண்களில் தீப்பொறி பறந்தது. ' அப்பா ! நீங்கள்தான சட்டத்தைமீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடிகெடுக்கும் மனிதர்?' என்று அவன் வியப்புடன் கேட்டான். அவன் குரல் நடுங்கிற்று ! ' ஆமாண்டா, ஆமாம்! " என்று சொல்லிவிட்டு, அவர் ஒரு பயங்கரச் சிரிப்புச் சிரித்தார். அவன் தலை சுழன்றது ! " அப்பா, இது சட்டவிரோதம் ! ' என்று ஆரம்பித்தான் அவன். - "அது எனக்குத் தெரியும்; அப்புறம்?' என்று உறுமினர் அவர். "மனித தர்மத்துக்கும் விரோதம், அப்பா!' "அதுவும் எனக்குத் தெரியும் : அப்புறம்? ' 'அப்புறமா? திருட்டுச் சாராயத்தைக் காய்ச்சி.ஊற்றி இந்த ஊமை ஜனங்களை அணுஅனுவாகக் கொல்வதைக் காட்டிலும் விஷத்தைஊற்றி ஒரேயடியாய்க் கொன்றுவிடலாம், அப்பா ! ' என்ருன் அவன். - ‘. . . - " அடேய், என்னசொன்னே ? நேற்றுபிறந்த பயல், நீ ! நீயா எனக்கு வந்து புத்தி சொல்றே? இதெல்லாம் பெரியவங்க காரியம் ; நீ ஒண்னும் கண்டுக்கிடாதே !' என்று நான் உனக்கு