பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 யாருக்கு விரோதி ? ஆமாம், கபர்தார்! அந்தக் கோவத்திலே நான் உன்னை என்ன வேனுமானலும் செய்துப்பிடுவேன். அதனலே இன்னிக்கு ராத்திரியே நீ திரும்பிப் பட்டணத்துக்குப் போயிடறதுதான் நல்லது. இந்தா, அம்பது ரூவா; வச்சுக்கோ! அப்புறம் மாசா ம்ாசம் உன் செலவுக்கு நான் வழக்கம் போலப் பணம் அனுப் பறேன்-என்ன?’ என்று நயத்துடன் கொஞ்சம் பயமும் காட்டிப் பார்த்தார் கண்ணுயிரம். இருக்கிற காசே ஏழு தலைமுறைக்குப் போதுமே, அப்பா!' என்று மீண்டும் ஏதோ சபலத்துடன் ஆரம்பித்தான் அவன், இந்த உபதேசம்தானே நான் வேணுங்கிறேன் ?’ என்று கர்ஜித்தார் அவர், நக்கீரனுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரிய வில்லை; வாயடைத்துப் போனன். கபர்தார் கண்ணுயிரமோ அவனுடைய கையில் ஐம்பது ரூபாயைப் பலவந்தமாகத் திணித்தார். அவன் அந்தப் பணத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அதற்குப் பிறகு எதிர்ச் சுவரில் மாட்டியிருந்த தன் தாயாரின் புகைப்படத்தையும் பார்த்தான்: ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு, அம்மா இன்று உயிருடன் இருந்திருந்தால்?’ என்று எண்ணி, அவன் மனம் ஆறுத லடைந்தது. சிற்றன்னையோ அந்தப் பக்கம் தலையைக் காட்டவேயில்லை; கபர்தார் கண்ணுயிரத்தைக் கண்டால் அவளுக்கு அவ்வளவு தைரியம்! அவன் நின்றது நின்றபடி நின்று, மேலே என்ன செய்வ தென்று யோசித்தான். கபர்தார் பொறுமையிழந்து, 'என்ன சொல்கிருய்?' என்று அதட்டினர். 'அப்படியே ஆகட்டும், அப்பா!' என்று சொல்லிவிட் டான் அவன். அந்த நிமிஷம் அப்பாவின் யோசனை அவனுக்கும் ஒரு விதத்தில் நல்லதாகவே தோன்றிற்று. ஆனல் அடுத்த நிமிஷம் ?...... அவனுடைய மனத்திலே ஒரு பெரிய போராட்டம் எழுந் தது. அந்தப் போராட்டத்தின் காரணமாக அவனுடைய யோசனை வேறு திக்கை நோக்கிச் சென்றது. அந்தத் திக்கிலே