பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி 5 எப்படி என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டு வந்தேன். என் எண்ணம் நிறைவேறுவதற்கான ஒரு சம்பவம் விரைவிலேயே நடந்தது. கடவுள் என் பக்கம் இருக்கிருர் என்று தோன்றியது! ஒரு சமயம் அப்புக்குட்டி முதலியார் தம் குடும்பத்துடன் ஏதோ வியாதியை சொஸ்தப்படுத்திக் கொள்ளப் பட்டணத் துக்கு வந்து ஆறு மாதம் தங்கியிருந்தார். இங்கே அவர்களுக்கு பந்துக்கள் பலர் இருக்கிருர்கள். அவர் திரும்ப ஊருக்கு வந்த அன்று அவருடைய ஆள் ஒருவன் சாராயக் கடைக்கு வந்து ஒரு புட்டி சரக்கு வாங்கிக்கொண்டு போனன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாயிருந்தது. பட்டணத்தில் பந்துக்கள் வீட்டில் கற்றுக் கொண்டார் போலும் என்று எண்ணினேன். மூன்று நாள் கழித்து மறுபடியும் அந்த ஆள் வந்து இன்னொரு புட்டி வாங்கிக்கொண்டு போனன். அப்போது எனக்குண்டான சந்தோஷத்தை அளவிட முடியாது. சரி, முதலியார் நமது வலையில் வீழ்ந்தார். அவர் கர்வம் ஒழிந்தது ; இந்த ஊரில் நம்மைத் தவிரக் கடன்கொடுப் பார் யாருமில்லை. தெய்வயானை நம்மைத் தப்பி எங்கே போகி ருள்? என்று இவ்வாறெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினேன். எல்லாம் நான் எண்ணியபடியே நடந்து வந்தது. ஒரு வருஷத் துக்குள் அப்புக்குட்டி முதலியார் ஊரறிந்த பெருங் குடிகாரரா னர். கடன் விஷம்போல ஏறிவந்தது. ஏராளமான பூமி அவருக் கிருந்தாலும் வட்டி கொடுப்பது எளிதன்று. நிலத்தை விற்றுக் கடனைத் தீர்ப்பதற்கும் நிலத்தை வாங்குவார் யாருமில்லை. இந்த நிலைமையில் ஒரு கோர்ட்டு வாரண்டு அவர் மீது பிறந்தது. வாரண்டில் தப்புவதற்காக கையிலிருந்த சர்க்கார் கிஸ்திப் பணத் தைக் கொடுத்து விட்டார். இவர் குடிகாரரென்றும், கடன் கார ரென்றும், மொட்டை விண்ணப்பத்தின் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிந்து சோதனைக்கு வந்துவிட்டார்கள். முதலியார் தம் கர்வ மெல்லாம் விட்டு என்னிடம் ஓடிவந்தார். என் காலில் விழுந்து கெஞ்சினர். எண்ணுாறு ரூபாய் கடன் கொடுத்து அவர் தலைக்கு வந்த விபத்திலிருந்து அவரைத் தப்புவித்தேன். நான் கொஞ்சம் குறிப்புக் காட்டியதுதான் தாமதம், முதலி யார் தெய்வயானையை எனக்குக் கலியாணம் செய்து கொடுப்ப தற்குத் தம்முடைய பூரண சம்மதத்தைத் தெரிவித்தார். விவா கத்திற்கு நாள் குறிப்பிடுவதுதான் பாக்கி. இந்தச் சமயத்தில் அப்புக்குட்டி முதலியார் ஒரு நாள் திடீரென்று மரணமடைந் தார். நல்ல திடதேகியாயிருந்த அவர் இப்படி அகால மரண மடைந்ததற்கு மித மிஞ்சிய குடிதான் காரணமாயிருக்க வேண் டும். இந்தத் துக்கச் சம்பவத்தினல் என்னுடைய உத்தேசங்களைப்