பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் பெயருக்குக் காரணமான ஒரு தமிழ்ப் புலவன், 'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்று அருந்தமி ழைப் பெற்றெடுத்த ஆதிசிவனையே எதிர்த்து நின்ற காட்சியை அவன் அகக்கண்ணுல் கண்டான். அவ்வளவுதான்; அவன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்தது! - அதன் பலன்?...... அன்றிரவே வீட்டை விட்டுச் சென்ற நக்கீரன், மறுநாள் காலை கபர்தார் கண்ணுயிரம் கொஞ்சம் எதிர்பாராதவிதமாகப் போலீஸ் அதிகாரிகளுடன் உள்ளே நுழைந்தான். அப்புறம் என்ன?-புழக்கடையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறை அவ ருடைய உத்தரவில்லாமலே திறக்கப்பட்டது. அதற்குள்ளிருந்த சாராய ஜாடிகளெல்லாம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. அவர் கைதியானுர்! காட்டுத் தீ போல் பரவிய இந்தச் சேதி தாழம்பேடு முழு வதையுமே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அதன் காரணமாக நக்கீரனைச் சிலர் வைதார்கள் ; சிலர் வாழ்த்தினர்கள். நல்ல முத்தோ அவனைத் தெய்வம்' என்றே கொண்டாட ஆரம் பித்து விட்டான்! நக்கீரன் எதையும் பொருட்படுத்தவில்லை யென்ருலும், அவ னுடைய இதயத்தின் அடிவாரத்தில் மட்டும் இன்னதென்று விவரிக்க முடியாத ஏதோ ஒரு வேதனை குடி கொண்டது. அந்த வேதனையுடன் அவன் சிற்றன்னையை நெருங்கி, சித்தி, என்னை மன்னித்து விடுங்கள். சித்தி !' என்ருன் தழதழத்த குரலில். என்னதான் இருந்தாலும் இப்படிக் கூடச் செய்யலாமா நீ ?' என்ருள் அவள், - - நக்கீரன் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான். அவனுடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணிர்த் துளிகள் கீழே விழுந்து சிதறின. ' சொல் தம்பி, உன்னைப் பெற்று வளர்த்தவர் இல்லையா, அவர்?' என்ருள் அவள் மீண்டும். அதற்கும் அவன் குனிந்த தலை நிமிராமல், "ஆமாம்' என்ருன். - х - - .

நக்கீரன் என்று அழகாகப் பெயரிட்டு, நாவினிக்க அழைத்தவர் இல்லையா, அவர் ?'

ஆமாம்.”