பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 யாருக்கு விரோதி ? 'நீ படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காகப் பணத் தைத் தண்ணீராகப் பாவித்துச் செலவழித்தவர் இல்லையா, அவர் ?’ ’ ஆமாம். ' எல்லாவற்றுக்கும் அவன் ஆமாம், ஆமாம். என்று சொல் லவே, அவள் இன்னும் கொஞ்சம் அவனை நெருங்கி, ‘அப்படிப் பட்டவரா உனக்கு விரோதி?’ என்ருள் கொஞ்சம் வேகமாக. அவ்வளவுதான்; அவர் எனக்கு விரோதி இல்லை!" என்று சொல்லிக்கொண்டே அவன் தலை நிமிர்ந்தான். பின்னே யாருக்குத் தம்பி, விரோதி ?’ என்ருள் அவள். ' சட்டத்துக்கு விரோதி, சமூகத்துக்கு விரோதி; நீதிக்கு விரோதி, நேர்மைக்கு விரோதி!' என்ருன் அவன்.