பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 அரங்கேற்றம் & 8 என்னது ? 3 * ஆமாங்க. பகல்லே க்ளின் பண்றப்போ எடுத்து ஷெட்டி லேயே வச்சுட்டேன் போலத்தோணுது ' அப்போ என்ன வழி ? அவர் பதைபதைத்தார்.' பார்க்கலாங்க! ஏதவாது லாரி இந்தப் பக்கம் வந்தா ஊருக்குத் தகவல் சொல்லி அனுப்பிக்கொண்டாரச் சொல்ல வேண்டியதுதான் ! வேம்புவையர் பேயடித்தாற்போல நின்றுவிட்டார். சரியாக ஆறுமணிக்குக் கச்சேரியை ஆரம்பித்து விடவேண் டும் என்று அந்தத் தனவந்தர் சொல்லியிருந்தார். இப்போது என்ன செய்வது ? காரிலிருந்து தகப்பனும் மகனும் இறங்கினர்கள்: " எப்படியப்பா ஆச்சு?’ என்ருன் சாமா, ' ஆணியோ எதுவோ வழியிலே கிடந்து கிழிச்சிருக்குதுங்க ...அதோ பாருங்க !' அவர்கள் பார்த்த இடத்தில் சாலையில் தேய்ந்த மாட்டு லாடம் ஒன்று வெற்றிச் சிரிப்புடன் மல்லாந்து கிடந்தது. ' எந்த மடக்கழுதையோ மாட்டைச் சரியாகக் கவனிக் காமே வண்டியிலே கட்டி ஒட்டியிருக்கானுங்க ! ’’ 'பாவம் ! அந்த மாடு வெறுங்காலுடன் எவ்வளவு சங்கடப் பட்டிருக்குமோ?’ என்ருன் சாமா. " ஆமாண்டா! நீ ஒண்னு டயத்துக்குள்ளே போய்ச் சேரனுமேன்னு நான் கவலைப்பட்டுண்டிருக்கேன்' வேம்புவையர் மகனைப் பார்த்து சீறினர். சே! என்ன கஷ்டகாலம்? இருந்திருந்து நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து முதல் கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணின இப் படியா ஆகணும் ? . ஏமாற்றத்திலும் கோபத்திலும் அவரது உடல் படபடத்தது. 'வருத்தப்படாதேங்கோ அப்பா ! எல்லாம் ஈஸ்வராக்ஞைப் படிதான் நடக்கும் ! நாம்ப என்ன செய்ய முடியும்? ' பெரிய வேதாந்தி இவன், எனக்குச் சொல்ல வந்துட் டான் ! ' சாமாவை முறைத்துப் பார்த்தார். ' என்னப்பா டிரைவர் ... வ்வளவுதான ? :