பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸவாதி 367 நான் என்னங்க பண்றது? சோதனைபோல ஆயிடுச்சிங் களே ? வேம்புவையர் உறுமினர். சோதனையாமே ! நீ மாத்துச் சக்கரம் கொண்டுவந்திருந்தி யான இங்கே இந்த அத்வானத்திலே இப்படிச் சந்தியிலே நிற்கும்படி ஆகுமா ? " அதான் சொல்லியாச்சுங்களே மறந்துபோச்சுது. இப்போ என்ன செய்யச் சொல்றீங்க ? வேறே வண்டி வேணுமான வச்சுக் கிட்டுப்போங்க எந்த வேளையிலே இந்த கிராக்கியைப் பிடிச் சேனே ... ! டிரைவர் அரைகுறை எரிச்சலுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். என்ன செய்வது இப்போது ? யாரையாவது ஏதாவது சொல்லித்திட்டவோ செய்யவோ வேம்புவையர் துடித்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்படி நடந்ததற்கு யாரை என்ன செய்ய முடியும்? தம் கையாலாகத் தனத்தைக்கண்டு அவருக்கே வெறுப்பு வந்தது. நிம்மதியின்றி முன்னும் பின்னுமாகச் சாலையில் நடந்து கொண்டிருந்தார். சாமா தம்புராவுடன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு விட்டான். " "எலே! எழுந்திர்ரு! புதுவேஷ்டியைக் கசமாக்கிப்பிடாதே ’’ தகப்பனரின் கோபம் எந்தத் திக்கில் எதற்காகப் பாயும் என்கிற நியதி கிடையாது என்பதைச் சாமா அநுபவத்தில் தெரிந்து கொண்டிருந்தான். சொன்னபடி கேட்காவிட்டால் அவருக்கு வெறியே பிடித்துவிடும். எழுந்து வேஷ்டியைத் தட்டிவிட்டுக்கொண்டு நின்ருன் அவன். பொறுமையை இழந்தவராக வேம்புவையரே சிறிது நேரத்தில் அந்த மரத்தடியில் அமர்ந்தார். நீ அதிர்ஷ்டக்கட்டைங்கறது இன்னிக்குத்தாளு எனக்குத் தெரியும்? பிறந்தபோதே நிச்சயமாகிப்போன விஷயந்தானே, அது ? 3 x சாமாவுக்குக் கண்கள் கலங்கின. மெளனமாக அவரருகே நின்றிருந்தான். - - சாலையில் கார் தன்னந்தனியே அநாதையைப்போல் நின்று கொண்டிருந்தது. டிரைவர் ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டு புதர் மறைவுக்குப் போய்விட்டான்.