பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 அரங்கேற்றம் சுற்றுப்புறம் அமைதியாக இருந்தது. அழகான சூழ்நிலை. பசேலென்று பச்சைப்போர்வையைப் போர்த்திக்கொண்டிருந்தது பூமி. சாலைக்குக் கொஞ்சதுரம் தள்ளி வாய்க்காலொன்று மெல்லிய ஓசையுடன் ஒடிக்கொண்டிருந்தது. இறங்கிக்கொண் டிருந்த சூரியனின் கதிர்கள் வெண் மேகங்களுக்குச் செம்மண் இட்டுக் கொண்டிருந்தன. மங்கிய மஞ்சள் ஒளியில் அருகிலிருந்த கொன்றை மரங்கள் மஞ்சள் பூக்களுடன் முறுவலித்துக்கொண் டிருந்தன. சற்றுத்தள்ளி ஒரு மரத்தடியில் சூலம் ஒன்று நட் டிருந்தது. பட்டைபட்டையாகக் குங்கும விபூதிப் பூச்சுக்கள் அந்தப் பச்சைநிறச் சூழ்நிலையில் அந்தச் சூலத்தைத் தெளிவாகக் காட்டின. அதன் அருகே சிறு உருவம் ; எந்தக் கிராமத்துத் தேவதையோ? முனியனே, சங்கிலிக் கருப்பனே, எல்லையம்மனே! உருவமும் தெரியாமல் கல்லா, மரமா என்பதை அறியமுடியாத வகையில் எண்ணெய் மொழுக்கும்பிசுக்குமாக அந்தத் தெய்வம் நின்றுகொண்டிருந்தது. அவ்வப்போது கால்நடையாகப் போய்க் கொண்டிருந்த ஒரிருவரையும் வீடு திரும்பும் ஆட்டு மந்தையை யும் தவிர சாலையில் அதிக நடமாட்டம் இல்லை. இருள் லேசாகக் கவியத் தொடங்கியதும் சிள்வண்டுகள் சுருதி கூட்டத் தொடங்கின. சாமா தன் தகப்பளுரை ஒருமுறை பார்த்தான் கோப மெல்லாம் போய் அவர் முகத்தில் கவலையும் நிராசையும் நிரம்பி யிருந்தன. மேல்வேஷ்டியை இடுப்பில் கட்டிக்கொண்டான். அழுக் கடைந்த பழையகாலத்துப் பட்டுப்பையிலிருந்து விபூதியை எடுத் துக் கையில் போட்டுக்கொண்டு வாய்க்கால் பக்கமாக சாமா நடந்தான்: வேம்புவையர் பிரமை பிடித்தவர் போல உட்கார்ந்திருந் தார். செய்திருந்த ஏற்பாடுகள் என்ன ? நடந்தது என்ன ? பையனை முதன் முதலாகப் பெரிய சதவில் பாட ஏற்பாடு செய்வதற்கு அவர் பட்ட சிரமங்கள் அவருக்குத் தான் தெரியும். சதஸ் பூராவும் நல்ல ரஸிகர்கள். போதாக்குறைக்கு ரஸிக சிரோமணியான ஒரு பணக்காரர் வீட்டில் நடக்க வேண்டிய கச்சேரி அது. அதற்காகக் காரியஸ் தரைப் பார்த்து எவ்வளவு தடவை பல்லேக் காட்டி வாய்க்கரிசியும் போடவேண்டியிருந்தது ? தனவந்தர் நல்லவர்தான். அருமையான சங்கீதமாக இருந்தால் அள்ளி அள்ளிக் கொடுப்பாராம். இந்தக் கச்சேரி இன்று நடந் தால் அவர் தரும் சம்மானத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இத்தனை நாளாகத் தன்னுடன் ஒண்டுக்குடியாக இருந்துவரும் தரித்திரத்தின் முகத்தில் காறித்துப்பலாம் என்று அவர் கனவு