பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 அரங்கேற்றம் கத்தான் விளக்கைப்போட்டேன். வெளிச்சத்திலே வந்து இருங்க ’’ டிரைவரின் பரிவு அவரை அசைத்து விட்டது. நெடுமூச்சு டன் மரத்தடியைவிட்டு எழுந்தார். எதிரே சாமா பளிச்சென்று விபூதிப்பட்டையும் அதுவுமாக மந்தகாச முகத்துடன் நின்று கொண்டிருந்தான். சந்தியாவந்தனம் இங்கேயே வாய்க்கால்லே பண்ணிட் டேம்ப்பா ! ’’ அந்தக்குரல் அவரைக் குழையச் செய்தது. அவனுடைய குழந்தை முகத்தை ஒருமுறை ஏறிட்டுப்பார்த்தார். இவனைப் போய்க் கோபித்துக் கொண்டோமே ! குழந்தை இவன் என்ன பண்ணினன்; பாவம் ! என்று மனம் நெகிழ்ந்து பச்சாத்தாபப் பட்டார்டு

  • கொஞ்சம் இரு, நானும் வந்துடறேன் ! ’’ நித்திய நியமத்தை மகன் நினைவூட்டும்படியாகிவிட்டதே என்னும் வெட்கத்துடன் பட்டுப் பையை எடுத்தபடி வாய்க் காலை நோக்கி நடந்தார் வேம்புவையர்.

அநுஷ்டானங்களை முடித்துக்கொண்டு திரும்பி வந்தபோது கண்டகாட்சி அவரைத் திடுக்கிடச்செய்தது. வாடகைக்காரின் முன்விளக்குகளின் பிரகாசமான ஒளியில் சூலத்துக்கும் அந்தக் கருஞ்சிலைக்கும் எதிரே தரையைச் சுத்தம் செய்துவிட்டு, கண்ணை மூடியபடி தம்புராவை மீட்டி சுருதிசேர்த் துக் கொண்டிருந்தான் சாமா. என்னடா இது ? அவர் பதறினர்: சாமா கண்ணேத்திறந்து அவரைப் பார்த்தான். : இங்கேயே பாடலாம்னு தான்...! ' '. நன்னயிருக்குடா காரியம் ! ' - " நாளும், யோகமும், நட்சத்திரமும் பார்த்துப்பொறுக்கின வேளை தவறவேண்டாம்ப்பா ! "அதுக்காக?' வெளியிலே முதன்முதல்லே நான் இன்னிக்குக் கச்சேரி செய்யணும்னு ஏற்பாடாச்சு. அது இந்த சுவாமி சந்நிதியிலேயே இருக்கட்டுமேன்னு...' - $$. ஏண்டா! உனக்கென்ன மூளை பெரண்டு போயிடுத்தா?” சாமா பொறுமையுடன் அவரைப்பார்த்தான். அதற்குள்