பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்வாதி 211 கார்விளக்கு ஒளியைப் பார்த்துவிட்டு ஏழெட்டுப்பேர், சிறியவர், பெரியவர், கோவணங்கட்டியவர், மேல்துணி இல்லாதவர் இவ் விதமாக அங்கு சேர்ந்து, அதிசயத்துடன் வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டனர். ஏம்ப்பா இப்படிச் சொல்றேள்? இங்கே இந்த சந்நிதியிலே தான் நான் பாடணும்னு ஈஸ்வராக்ஞை, அப்படீன்னு என் மனசிலே பட்டுது. அதேைல இங்கேயே இந்தத் தெய்வத்தின் முன்னேயே உக்கார்ந்து அதன் எதிரேயே பாடி என் அரங்கேற் றத்தை நடத்திப்பிடறேன் !' சாமாவின் முகத்திலிருந்த அலாதிப் பளபளப்பும் மலர்ச்சியும் வேம்புவையரை என்னவோ செய்தன. அங்கே பெரியமனுஷாளும் ரஸிகாளுமா சதஸ் நிரம்பக் காத்துண்டிருப்பா, அதைவிட்டாச்சு. என்னவோ இந்தக் காட்டுமரத்துக்கும், செம்மண் ரோட்டுக்கும், சூலாயுதத்துக்கும், கருப்பண்ணசாமிக்கும் எதிரே பாடப்போருளும்; இந்தக் கோவணுண்டிகள் சதஸ்தான் உனக்கு வேணுமா ? சீச்சீ !' நிதானமாக அவரை ஒருமுறை மலர்ந்த முகத்துடன் பார்த் தான் சாமா. அப்பா ரொம்ப சிரமப்பட்டு முதல் கச்சேரிக்கு வேளை பார்த்தேள். அதை வீணுக்காமே இப்பவே தொடங்கணும்னு என் ஆசை. இந்த நிமிஷமே பாடுன்னு என் மனசிலே ஏதோ ஒண்ணு சொல்றது. இந்த சந்நிதானத்தையும், இதோ இருக்கிற ஜனங்களையும் விடவா பெரிய சபை கிடைக்கப் போறது ?" வேம்புவையர் வாயடைத்துப் போளுர். அவர் மேற்கொண்டு வேறு எதுவும் பேச முயலும் முன்பே தம்புரா சுருதியுடன் இழைந்து சாமாவின் குரல் இனிமையாகக் கிளம்பிற்று. சிலைக்கும் சூலத்துக்கும் கையைக் கூப்பிக் கண்மூடி நமஸ் கரித்து விட்டு அவன் பாட ஆரம்பித்தான். 1 சாலையில் வந்த ஓரிருவர் நின்றனர். கசமுசாவென்று பேசி னர், ஒரு சிலர் வேகமாக ஓடினர். எங்கோ, எதற்கோ அந்த வழி வந்த மாட்டு வண்டி ஒன்றுகூட அங்கேயே நின்று விட்டது. - - - - - - • , ; சாமா மெய்ம்மறந்து கீர்த்தனைக்கு மேல் கீர்த்தனையாகப் பாடிக்கொண்டே இருந்தான். முன்னிரவின் அந்த அமைதி யில் சிள்வண்டுகளும் ஓய்ந்து போய், அந்தக் கானவெள்ளத்தைப் பருகியது போலத் தோன்றிற்று. அவனது கண்டத்திலிருந்து