பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 அரங்கேற்றம் ராகங்கள் எல்லாம் சுஸ்வரத்துடன் பாவபூர்வமாகக் கிளம்பி வெளிவந்து சுற்றுப்புறத்தையே பரவசத்தில் ஆழ்த்தின. நேரத் தின் எல்லையே மறந்து போய் விட்டது போலத் தோன்றியது, அவன் அமர்ந்து பாடிய விதத்தைப் பார்த்தால். கண்ணைத் திறந்தபோது சாமா பிரமித்துப் போய்விட் டான். ஆணும், பெண்ணும், குழந்தையும் குட்டியுமாக ஐம்பது அறுபது ஜனங்கள் அங்கே குழுமியிருந்து திறந்த வாய் மூடாமல் லயித்துப் போய் உட்கார்ந்திருப்பது அவன் பார்வை யில் பட்டது. இவர்களெல்லாம் யார் ? எப்போது யாரால் அழைக்கப்பட்டு வந்தார்கள் ? அவனுக்கே புரியவில்லை. தன் கண்களையே அவனுல் நம்ப முடியவில்லை. தன் பாட்டுக்கு இவ்வளவு கூட்டமா? இத்தனை ரஸிகர்களா ? வேம்புவையரும் சங்கீத மயக்கமும், கூட்டத்தைப் பார்த்த வியப்புமாக பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தார். சுய நினைவு வந்த சாமாவுக்கு மனதுக்குள் ஒரு புதிர் அவிழ்ந்தது. சங்கீதத்துக்காகச் சபையைக் கூட்ட வேண்டிய அவசியமே இல்லை. நல்ல சங்கீதம் தானே எப்பொழுதுமே ரஸிகர் களை அழைத்து வந்து சேர்த்துவிடும். தனவந்தர் வீட்டுப் பந்தலானலென்ன, கருப்பண்ணசாமி சந்நிதியாக இருந்தா லென்ன ? எதுவும் அதற்கு ஒன்றுதான். கடவுள் மாதிரி சங்கீதத்துக்கும் எந்த வித பேதமும் பாராட்டத் தெரியாது! சாமா எழுந்தான். எட்டு அங்கமும் படியும் விதமாக அந்தச் சிலைக்கு நமஸ்காரம் செய்தான். பிறகு கூட்டத்தை நோக்கிக் கும்பிட்டான். அவன் மனத்தில் அலாதியான ஒரு நிறைவு ஏற்பட்டிருந்தது. - " சின்ன ஐயரு ரொம்ப நல்லாப் பாடினருங்க!’ முன்னல் உட்கார்ந்திருந்த கிழவன் தான் பேசினன். திருப்தி அவன் வார்த்தைகளில் நிறைந்திருந்தது. "ஆமாங்க" என்று பல குரல்கள் ஆமோதித்தன. ' சாமிக்கு எந்த ஊருங்க?' என்று கேட்டான் ஒருவன். வேம்புவையர் அவர்களைப் பார்க்கவும் பேசவும் பிடிக்காமல் மெளனமாக இருந்தார். சாமா பதில் சொன்னன். " நாங்கள்ளாம் அதோ அந்தச் சேரி ஜனங்க. எங்களுக்குக் கூட இந்த மாதிரி நல்லாப் பாட்டுக் கேக்க ஒரு சமயம் கிடைச் சுதே. எல்லாம் இந்தச் சங்கிலிக் கருப்பன் அருள் தான். ' சேரி ஜனங்களா? *சிவ ഒഖ് என்று மனதுக்குள் முனகிய படி முகத்தைச் சுளித்துக் கொண்டார் வேம்புவையர். முதலில் ஸ்ளுணம் வேறு செய்தாக வேண்டும் இந்தத் தீட்டு போவதற்கு.