பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ தெய்வயானை பற்றிப் புனராலோசனை செய்ய வேண்டியதாயிற்று. இப்பொழுது நான் தெய்வயானையை விவாகம் செய்துகொண்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்ள வேண்டிவரும். ஏனெனில், அவர்கள் வீட்டில் வயது வந்த ஆண் மக்கள் யாருமில்லை. அப்புக்குட்டி முதலியாருடைய இரண்டாந் தாரம், சிறு பெண். அவளும் அவளுடைய கைக்குழந்தையும் தெய்வயானையும்தான் வீட்டில் உள்ளவர்கள். இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பையும் குடும்பத்தின் கடனைத் தீர்த்துச் சீர்படுத்தும் பொறுப்பையும் நானே வகிக்கவேண்டியவளுவேன். இப்படியெல்லாம் மனத்தில் சந்தேகங்கள் உண்டாயின. ஆனலும் முடிவில் தெய்வயானையை மணந்துதான் தீரவேண்டும் என்று தீர்மானித்தேன். இப்போதெல்லாம் கள்ளு, சாராயக்கடைகளுக்கு நானே நேரில் போவதில்லை. சம்பளஆட்கள் வைத்துவிட்டேன். அன்ருடம் சாயங்காலத்தில் மட்டும் சென்று கூடுமுதல் தொகையை வாங்கிக் கொண்டு வருவேன். ஒரு நாள் அவ்வாறு சென்ற போது, கிராம முன்சிப்பு வீட்டு வேலைக்காரன் அப்பொழுதுதான் கையில் புட்டி யுடன் கடையிலிருந்து வெளியே வருவதைக் கண்டேன். என்னைப் பார்த்ததும் அவன் சாலையோரமாய்ப் பதுங்கிக்கொண்டு சென் ருன். - இவன் இப்போது யாருக்குச் சாராயம் வாங்கிப் போகி முன்?’ என்று எனக்கு ஆச்சர்யமாயிருந்தது. ஏதோ ஒரு குருட்டு எண்ணத்தினுல் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று தோன் றிற்று. ஆகவே, அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். அவன் ஊர்த் தெருவின் புறம்பாய்ச் சென்று அப்புக்குட்டி முதலியாரின் வாயிற்படி வழியாய் நுழைந் தான். இதை முற்றும் ஆராயவேண்டுமென்று எண்ணி, தெரு வீதிக்குச் சென்று முதலியார் வீட்டுக்குள் நுழைந்தேன். நடைக்குச் சென்றதும் சிறிது தயங்கி உள்ளே எட்டிப் பார்த் தேன். அப்போது நான் கண்ட காட்சி இடி விழுந்தாற்போல் என்னைத் திகைக்கச் செய்து விட்டது. தெய்வயானையும் அவளுடைய சிறிய தாயாரும் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தார்கள். முதலியாருடைய மனைவி யின் கையில் சாராயப்புட்டி இரண்டு தம்ளர்களில் ஊற்றி ஒன்றை தெய்வயானையிடம் கொடுத்து மற்றென்றைத் தான் அருந்த ஆரம்பித்தாள். பல வருஷ காலமாக என் உள்ளத்தில் வளர்ந்து வந்த காதல் அத்தனையும் அந்த ஒரு கண நேரத்தில் விஷமாகி விட்டது. சொல்லமுடியாத அருவருப்பு எனக்குண்டா யிற்று. சத்தம் செய்யாமல் வெளியே வந்து அவசரமாக விடுவந்து சேர்ந்தேன். -.