பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸவாதி 2 I 3 பசி, தாகம் எல்லாம் மறந்து கேட்டோம். எங்க ஜனங் களுக்கு அறிவு பத்தாதுங்க. ஆனலும் சின்ன ஐயரு பாடினது அப்படியே மனசை ரொப்பிடிச்சுங்க. எல்லாரையும் எங்கேயோ ஆகாசத்திலே தூக்கிக்கிட்டுப் போன மாதிரி தோணிச்சுங்க ' என்ருன் ஒருவன். - இதை வாங்கிக்குங்க சாமி!' என்ருன் கிழவன். சாமா நிமிர்ந்து பார்த்தான். கிழவன் கையில் ஒரு சட்டி இருந்தது. - என்ன பெரியவரே ?’ என்று கேட்டான் சாமா: ஒண்னுமில்லீங்க. எங்களையெல்லாம் பாடி சந்தோசப் படுத்தின உங்களுக்கு ஏதாச்சும் தரணும்னு எங்களுக்கு ஆசை. ஆளு நீங்க ஐயமாரு. நாங்க தொட்டா சாப்பிடமாட்டிங்கன்னு தெரியும்... ” & & எதுக்கு இதெல்லாம் ?” சும்மா வாங்கிக்குங்க சாமி. பாலுதான், முனியன் வீட்டு ஆட்டுப் பாலு, நல்ல புல்லு தின்னு கொடுத்திருக்கு. பொழுது சாயக் கறந்தோம். காய்ச்சி வச்சிருந்ததை உங்களுக்குன்னு கொண்டாந்திருக்கான். ' தகப்பனுரைப் பார்த்தான் சாமா. அவர் முகத்தில் சிறு அசைவு கூட இல்லை. கண்கள் வெறித்த பார்வையில் நிலைத் திருந்தன. இருக்கட்டும் பெரியவரே. நீங்கள்ளாம் இத்தனை நேரம் உக்காந்து கேட்டதே எனக்குப் பரம திருப்தி ' என்ருன் சாமா அடக்கமாக. - தட்டாமே வாங்கிக்குங்க பாலுக்குத் தோஷம், தீட்டு இல்லீங்க. ஐயமாருக்குத் தெரியாத விஷயமா? நாங்க பிரியப் பட்டுக் கொடுத்ததை வாங்கிக்கிட்டா எங்களுக்கும் ஒரு சந் தோஷம். எங்களைப் போல ஏழைங்களாலே வேறே காசு, பணமா கொடுக்க முடியும் ?’’ - - கிழவனின் குரல் உணர்ச்சிப் பெருக்கில் கரகரத்தது. அந்த அன்பையும் பரிவையும் சாமாவினல் மறுதளிக்க முடியவில்லை. வாங்கிக் குடித்தான். ஏதோ அமிர்தபானம் செய்தது போல இருந்தது அவனுக்கு, அவ்வளவு உவகை. இவர்களுக்கெல்லாம் தான் பாடிய பாட்டுக்களின் சாகித்யம் புரிந்ததா, ஸ்வரம் புரிந்திருக்குமா? ஆனாலும் நாதத்தின் சக்தியில், சுஸ்வரமான சங்கீதத்தின் பிணைப்பில் கட்டுண்டு