பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 அரங்கேற்றம் மெய்ம்மறந்து கேட்டிருக்கிரு.ர்கள். இன்னிசையை ரஸித்து அனுபவிப்பதற்கு இதைவிடவா தேர்ந்த சதஸ் வேண்டும்? கெளரவம் வித்தைக்குத் தான். அதைப் பணக்கார உயர் குலத்தவன் கொடுத்தாலென்ன, அல்லது இந்த ஏழை அரிஜனங் கள் கொடுத்தால் என்ன ? கிழவனின் பாதத்தைத் தொட்டு வணங்கினன் சாமா ' என்னங்க சாமி இது?’ என்று பதறினன் கிழவன். “ டேய்!” என்று வேம்புவையர் அலறிஞர் : ஒண்னுமில்லே பெரியவரே. உங்களைப் போல இருக்கிற வாளுடைய ஆசீர்வாதந்தான் எனக்குப் பெருமை ' என்ருன் 3RPF Lost. சங்கிலி ஆண்டவன் சின்ன ஐயருக்கு மெம்மேலே நல்ல பேரு கொடுக்கணும் ' என்று குலத்தின் பக்கம் கையைக் காட்டி வேண்டினன். மனதில் ஒரு பூரிப்புடன் தகப்பனரை அணுகினன் சாமா. முதல் கச்சேரியை நல்லபடியாகவே முடிச்சுட்டேம்ப்பா !” ' ம் !’’ வெறும் முனகல் தான் வேம்புவையரிடமிருந்து வெளிப்பட்டது. ஆண்டவனுக்கும் நாதப்பிரம்மத்துக்கும் குலம், ஜாதி பேதம் கிடையாது என்பது அவருடைய அறிவில் பொறி தெறித்தாற் போலப் பட்டது. ஆயினும் அவரது மனம், தன் மகன் கனதன வான்கள் இருக்கும் சதவில் அரங்கேற்றம் செய்து பெற்றிருக்க வேண்டிய சம்மானத்தைப் பற்றித்தான் ஏங்கிக் கொண் டிருந்தது. -