பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரண. துரைக்கண்ணன் 2| இராவணுகாரம் திருவல்லிக்கேணிப் பகுதி முழுதும் ஒரே பரபரப்பாய் இருந்தது. ஆங்காங்கு மக்கள் மூவர் நால்வராகக் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தனர். ' என்ன ஆகுமோ ? ஏது ஆகுமோ ?” என்ற அச்சம் சிலர் முகங்களில் காணப்பட்டது. " தம்பியப்பா வருகிருராமே? '

  • சும்மாவா வருகிருர்? துப்பாக்கியைத் துரக்கிக் கொண்டல் லவா வருகிருராம். ' -

இந்தச் சத்தியாக்கிரகிகளுக்கு இவருடைய சங்கதி தெரி யாது போலிருக்கு." இவர்கள் இந்தக் கள்ளுக்கடைக்கு ஏன் மறியல் செய்ய வந்தார்கள் ? வேறெங்காயினும் போவது தானே? ' - ": இங்கு மட்டும் என்ன ? எல்லா மதுபானக் கடைகளிலுந் தான் மறியல் செய்கிருர்கள் ; காந்தி மகாத்மா கட்டளைப் படி. ' மற்ற இடங்களில் எதுவானலும், என்னவானலும் நடக்க லாம். இந்தக் கிருஷ்ணும்பேட்டை இருக்கிறதே? இது இரா வணன் தர்பார் நடக்கிற இடம் ஆச்சே! இதன் கிட்டே வரலாமா ?” . . - ' சத்தியாக்கிரகிகளுக்கு எல்லா இடமும் சமந்தான்." - காந்தி ஆசாமிகள் யாருக்காகவும் எதற்காகவும் தங்கள் கடமையைச் செய்யாமல் விட மாட்டார்கள். சாமிநாதப்பிள்ளை கடை வஸ்தாதுகள், சிலம்பம் ஆடுகிற கோதாவைக் காவலாகக்கொண்டதாச்சே! இந்த இடத்தில்