பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 6 இராவணகாரம் இவர்கள் அடியெடுத்து வைக்கலாமா? '

  • சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே கிடுகிடுக்க வைக்கிற காந்தித் தொண்டர்களா, இந்த ஆப்காரி காண்டிராக்டரின் உருட்டல் மிரட்டல்களுக்குப் பயந்து போய் விடுவார்கள் ? .

என்னமோ ஐயா ! இந்தச் சத்தியாக்கிரகிகளுக்குப் போதாத காலந்தான் இந்தக் கள்ளுக்கடையை மறியல் செய்ய வந்திருக்கிருர்கள் என்று எண்ணுகிறேன். ' பாவம் ! யார் பெற்ற பிள்ளைகளோ ? கும்பல் கும்பலாகக் கூடியிருந்தவர்கள் த ங் க ளு க் கு த் தோன்றியவாறெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த நிர்மாண வேலைத்திட்டப் படி 1931-ம் ஆண்டில் பாரதம் முழுதும் மதுபானக்கடை மறியலும், விதேசித்துணிக்கடை மறியலும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தன. நம் தமிழகத்திலும் இது எதிரொலி செய்து கொண்டிருந்தது. காந்தி மகாத்மா தலைமையில் நடைபெற்று வந்த இச் சுதந்திரப் போராட்டம் இந்தியாவின் மற்றப் பகுதிகளில் தீவிர மாக நடை பெற்று வந்தது போலவே அவற்றுக்கு ஒரு படி மேலாகவே தமிழ் நாடு முழுவதிலும் தீவிரமாக நடந்து வந்தது. கள்ளுச் சாராயக் கடை மறியலையும், அன்னியத் துணிக்கட்ை மறியலையும் திறமையாகவும் தைரியமாகவும்.நடத்திப் பல்லாயிரக் கணக்கான பேர் தடியடி பட்டும் ரத்தம் சிந்தியும் சிறை சென்று கொண்டிருந்தனர். - இச் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பின்பற்றித் தான் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் சிலர் கிருஷ்ணும்பேட்டை சாமிநாதப்பிள்ளை கள்ளுக்கடையை மறியல் செய்ய வந்தனர், இங்கு தொண்டர்கள் வந்து கள்ளுக்கடையை மறியல் செய்யப் போகின்ருர்கள் என்ற செய்தி எப்படியோ காட்டுத் தீப்போல் முன்னதாகவே பரவி விட்டிருந்ததால், அன்று பொழுது புலரு வதற்கு முன்னிருந்தே மக்கள் திரள் திரளாக வத்து கூடலா யினர். போலீஸாரும் தங்கள் கடமையை ஆற்றுவதற்காக ஏராளமாக வந்து இருந்தனர். 'இரகுபதி இராகவ இராஜா ராம் ; பதிதபாவன சீதாராம் ' என்று பாடிக் கொண்டே சத்தியாக்கிரகத் தொண்டர்கள் உதயவனம் முகாமிலிருந்து வந்து கொண்டிருந்தனர். வீரசுதந்திரம் வேண்டி நின்ருர், பின்னர் வேருென்று கொள்வாரோ?', ' என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?. என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்'