பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரண-துரைக்கண்ணன் 217 ஜெய பேரிகை கொட்டடா, கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது, ' என்பன போன்ற பாடல்களைப் பாடிக் கொண்டே வந்து சாமிநாதப்பிள்ளையின் கள்ளுக் கடையை அவர்கள் முற்றுகையிடலாயினர். கள்ளுக்கடை வாயிலின் முன் வரிசைக்கு இருவர் மூவராக அத்தொண்டர்கள் நின்று, கள் குடிக்க வருவோரைப் பார்த்துப் பணிவாக, 'ஐயா ! கள்ளு குடிக்கப் போகாதீர்கள். அது உங்களுக்குப் போதையுண்டு பண்ணி உடம்பைக் கெடுக்கும். அது மட்டுமல்ல, இந்தக் கள்ளுக்குடி உங்கள் குடியை அடி யோடு அழித்துவிடும். கடைக்குள் நுழையாமல் தயவுசெய்து திரும்பிப் போய்விடுங்கள் ' என்று கைகூப்பி வணக்கஞ் செய்து பணிவாகக் கேட்டுக் கொள்ளலாயினர். குடிக்க வந்தவர் சிலர் அத்தொண்டர்களுடைய வேண்டுகோளைச் செவியுற்றுத் திரும்பிப் போகலாயினர். சிலர், யாரடா இவன்கள்? நாங்கள் குடித்துக் கெட்டுப் போனல் உங்களுக்கு என்ன வந்தது? உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங் கடா !' என்று மூர்க்கத்தனமாகச் சொல்லிவிட்டுக் கடைக்குள் றுழையலாயினர். அப்படி நுழைபவர்களைத் தடுக்கச் சில தொண்டர்கள் அவர்களைக் கும்பிடுவது போல் தரையில் குறுக்கே விழுந்து வழி மறிக்கலாயினர். இது கண்ட சில குடியர்கள் அவர்களுடைய வழி மறிப்பு வேண்டுதலை மீற மன மில்லாமல் திரும்பிப் போகலாயினர். சிலர் சத்தியர்கிரகிகளை லட்சியம் செய்யாமல் அவர்களைத் தாண்டிக் கொண்டும், மிதித்துக் கொண்டும் கடைக்குள் நுழையலாயினர். இக்காட்சியை உள்ளிருந்து கவனித்துக் கொண்டிருந்த கள்ளுக்கடை தலைமை குமாஸ்தா கைலாசப் பிள்ளை, 'யாரடா இங்கே? சண்டித்தனம் செய்யும் இந்தக் காந்திப் பசங்களை இழுத்துக் கொண்டு போய் வெளியே தள்ளுங்கடா கடைக்கு வருகிறவர்களை வழி மறிக்கிருன்கள் என்று கோபத்தோடு கொக்கரிக்கலானர். இது கேட்டுக் கள்ளுக்கடை அடியாட்களும் குடிகாரர்கள் சிலரும், ஆய் !...யார்ரு நீங்க? மருவாதையா போlங்களா? இல்லே ; உங்க லூட்டியை அறுத்து எறிஞ்சு டட்டுமா?’ என்று கத்திக்கொண்டு வெளிவர முயன்றனர். இதுவரை நிலைமையைக் கவனித்துக் கொண்டிருந்த போலீஸ் காரர்கள் நிலைமை கட்டுமீறிப் போய்விடக் கூடாது என்று எண்ணி, ஏய்! நீங்க சும்மா இருங்கய்யா என்று உள்ளிருப் பவர்களைப் பார்த்து அதட்டிவிட்டுச் சத்தியாக்கிரகிகளை நோக்கி, 'தொண்டர்களே ! உங்களுக்கு இரண்டு நிமிஷம் அவகாசம் தருகிருேம். இதற்குள் நீங்கள் இவ்விடத்தைவிட்டுக் கலந்துபோய் விடுங்கள், கள்ளுக் கடைக்கு வருபவர்களை வழி