பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 இராவணகாரம் மறித்து நிறுத்த முயல்வது சட்டப்படி பெருங்குற்றமாகும், இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. மரியாதையாகப் போய் விடுங்கள் ' என்று உத்திரவிடலாயினர். சத்தியாக்கிரகிகள் இதைச் செவியேற்கவே இல்லை. மறியல் செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். கள்ளுக்கடை தலைமைக் குமாஸ்தாவிற்குக் கோபம் மிகுந்தது. அவருடைய மதுரை வீரன் மீசை துடிக்கலாயிற்று. அவர் போலீஸ்காரர் களைப் பார்த்து, ' என்னய்யா, கான்ஸ்டபிள்களே ! நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், இந்தப் பிச்சைக் கார நாய்களை இழுத்து வெளியே போடாமல் ' என்று முழக்க மிட்டார். போலீஸ்காரர்களும் பொறுமையிழந்து விட்டனர். கடை குமாஸ்தாவின் மரியாதையற்ற பேச்சு அவர்களுக்கு உணர்ச்சியை உண்டு பண்ணியது. சப்-இன்ஸ்பெக்டர் தன் கை யில் உள்ள குறுந்தடியை ஒருவிதமாக ஆட்டிக் கண் சைகையால் கான்ஸ்டபிள்களுக்குக் குறிப்புக் காட்டினர். உடனே கான்ஸ் டபிள்கள். தொண்டர்கள் இருக்குமிடத்திற்குப் பாய்ந்து, ஊம் போங்கள், கடைக்குமுன் நிற்காதீர்கள். வழியை மறிக் காதீர்கள் ' என்று உரத்த குரலில் கூறியவாறு மறியல் செய்து கொண்டிருந்த சத்தியாக்கிரகிகளைத் தாங்கள் வைத்திருந்த குண்டாந்தடிகளால் முரட்டுத்தனமாகத் தள்ளிவிடலாயினர். தரையில் விழுந்திருந்தவர்களையும் தூக்கி நிறுத்தித் தள்ளிவிட லாயினர். ஆனல், போலீஸாரின் இந்தக் கெடுபிடிகளுக்குச் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் சிறிதும் அஞ்சவில்லை. அவர்கள் மறுபடியும் வந்துநின்று அமைதியாக மறியல் செய்யலாயினர்: இது கண்டு ஒரு கணம் திகைத்துப்போன போலீஸார் அடுத்து தங்கள் குண்டாந்தடியைச் சுழற்றி அவர்களை விரட்டலாயினர். இதல்ை, சத்தியாக்கிரகிகள், சிலருக்குத் தடியடி விழலாயிற்று: சிலர் காயமுற்றனர். இது போன்ற துவந்துவ யுத்தம் வேடிக்கை பார்க்க வந்த பொது மக்களையும் ஆவேச உணர்ச்சி கொள்ள வைத்தது. இதற்குள் சிலர், சத்தியாக்கிரகத் தொண்டர்கள்வந்து கள்ளுக் கடையை மறியல் செய்வதையும், அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையையும் கள்ளுக்கடை முதலாளியான சாமிநாதப் பிள்ளைக்குத் தகவல் சொல்லலாயினர். சிலர் முதலாளியின் தம்பியிடமும் முறையிட்டனர். முதலாளியோ இந்நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று யோசிக்கலானர். 'தம்பியப்பா' எனச் செல்லமாக அழைக்கப்படும் முதலாளி யின் தம்பியான செளந்தரராஜப் பிள்ளை மட்டும் சத்தியாக் கிரகிகள் தங்கள் கடையை மறியல் செய்ய வந்திருக்கும் செய்தி கேட்டுக் கோபத்தால் குதிக்கலானர். யாரடா அது ? நம்ம கடையை வந்து மறியல் செய்வது? அவ்வளவு நெஞ்சுத்