பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரண - துரைக்கண்ணன் 219 தைரியமுடையவர்களும் இருக்கிருர்களா? அவர்களுக்கு நம்ம சங்கதி தெரியாது போலிருக்கு. இதோ வருகிறேன் என்று சொல்லு' என்று முழங்கிக் கொண்டே பெரிய மலை போன்ற தம் உடம்பைத் தூக்கிக் கொண்டு வேகமாகப் புறப்படலானர். அடுத்த கணம் அவர் கையில் துப்பாக்கி இடம் பெற்றது: அவருடன் அவருடைய பரிவாரங்களும் கிளம்பலாயினர். அக்கம் பக்கத்து மக்களும், தம்பியப்பா கோபத்துடன் கிளம்பி விட்டாரே ! என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ ?’ என்ற அச்சத்துடன் அவர்கள் பின்னல் நடந்தார்கள்: சாமிநாதப் பிள்ளையின் வீட்டிற்கும், கள்ளுக் கடைக்கும் மூன்று பர்லாங்கு தூரம்கூட இருக்காது. அவர் இருக்கும் தெருவிற்கு அடுத்த திருப்பத்தில்தான் கள்ளுக்கடை இருந்தது. கடையை அடுத்தாற் போலவே 10 கஜ தூரத்தில் ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. ஆல்ை, அது திருவல்லிக்கேணி பகுதிக்கு மட்டுமே உரியது. கிருஷ்ணும்பேட்டை பகுதிக்குப் பொறுப்பான போலீஸ் ஸ்டேஷன் இராயப்பேட்டை நெடுஞ் சாலையில் இருந்தது. இந்தக் கள்ளுக்கடை மறியலால் ஏற்படும் நிலைமையைச் சமாளிக்க இராயப்பேட்டை போலீஸார்தான் வந்திருந்தனர்: ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனைச்சேர்ந்த போலீஸார் இவர் களுக்கு உதவியாக இருந்தனர். இவர்களை மேற்பார்க்கவும் மறியல் நிலைமையைக் கண்காணிக்கவும் டிபுடி கமிஷனர் ஒருவர் வந்திருந்தார். இதுவன்றி இண்டலிஜன்ஸ் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சி. ஐ. டிக்கள் சிலரும் உத்தியோக உடுப்பின்றி கூட்டத் தோடு கூட்டமாக நின்று நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த னர். இந்தச் சி.ஐ.டிக்களில் ஒருவர் சத்தியாக்கிரகப் படைத் தளபதி ஒருவரைக் குறிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இதைத் தற்செயலாகக் கவனித்துவிட்ட அத்தளபதி அந்தச் சி.ஐ.டியை உற்றுப் பார்த்துவிட்டு, யார் அனந்தன? நீ இங்கேயாப்பர் இருக்கே? ஊரிலிருந்துவந்து எவ்வளவு நாளாச்சு? என்ன செய்துகொண்டு இருக்கே?' என்று உரத்தகுரலில் கேட்டார். தன்னை இன்னர் என்று க்ாட்டிக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கையாய் இருந்த அந்தச் சி.ஐ.டி. தளபதியின் குரலைக்கேட்டுத் திடுக்கிட்டுப் போளுர். பின் தன்னைச் சுதாரித் துக் கொண்டு ஒ ! பத்மநாப அண்ணன? நான்...நான்...' என நிறுத்திப் பின், "நீங்களும் இங்கே தான் இருக்கிறீங்களா? திருச்சூரிலிருந்து எப்போது வந்தீங்க ? எங்கே இருக்கீங்க ?” எனக் கேட்டார். ' போனவாரம் தான் வந்தேன். சத்தியாக் கிரகப் படையில்சேர்ந்து மறியல் செய்வதற்காக குருவாயூர் தலைவர் கேளப்பன் என்ன அனுப்பியிருக்கிரு.ர். ' எனச்