பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 இராவளுகாரம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு வந்து அவர்களை மோதித்தள்ளிப் பிரித்து விட்டது, கரிய பெரிய மலை அசைந்து வருவதுபோல் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்த தம்பியப்பா, கள்ளுக்கடையை நெருங்க நெருங்க மக்களிடையே பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. அவர் வழி நெடுகிலும் மறியல்செய்ய வந்திருக்கும் சத்தியாக் கிரகத் தொண்டர்களைப் பற்றி வாய்க்கு வந்தவாறு வசைமாரி பொழிந்து கொண்டே வந்தார். இப்பேச்சு கேட்போர் சிலருக் குக் கேலியாகவும் இருந்தது; பயம் ஊட்டுவதாகவும் இருந்தது. அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி பொதுவாக எல்லாருக் குமே அச்சத்தை ஊட்டியது. இதற்கிடையே சத்தியாக்கிரகத் தொண்டர்கள் போலீஸா ரின் கெடுபிடியையும், தடியடியையும் பொருட்படுத்தாமல் அணியணியாக வந்து மறியல் செய்துகொண்டு இருந்தனர். இதற்குள் ஏறக்குறைய 20 தொண்டர்கள் கைது ஆகி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு இருந்தனர். இப்போது ஆருவது தொண்டர் படை, தளபதி பத்மநாபன் தலைமையில் மறியல் செய்து கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் கள்ளுக்கடைக்கு முன் இருந்தவர்கள் இடையே சலசலப்பு ஏற்படலாயிற்று. "அதோ தம்பியப்பா வருகிருர் சின்ன முதலாளி வந்து விட்டார் என்று சிலர் பதட்டக் குரலில் கூறினர். உடனே அங்கிருந்தோர் கிழக்கு திசையை நோக்கித் திரும்பிப் பார்த் தனர். தம்பியப்பா முன்வர அவருக்குப் பக்கத்திலும், பின்னலும் பெருங்கூட்டம் வந்து கொண்டிருந்தது. இதைக் கண்டதும் போலீஸார் திடுக்கிடலாயினர். ஆளுல் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் சிறிதும் பதட்டம் அடைய வில்லை. வழக்கம் போலவே அவர்கள் அமைதியாகக் கள்ளுக் கடைக்கு வருவோரிடம் வேண்டுகோள் விடுத்தவாறு மறியல் செய்து கொண்டிருந்தனர். யாரடா அது? அங்கே? எங்கள் கடையை விட்டுப் போகப் போகிறீர்களா? இல்லையா ? என்று தம்பியப்பா போட்ட அதட்டல் குரல்கூட அவர்களை அசைத்திட வில்லை. தன்னுடைய வருகையும் அதட்டலும்கூட சத்தியாக் கிரகிகளைச் சிந்தை கலங்க வைக்கவில்லை என்று அறிந்ததும், தம்பியப்பாவின் ஆத்திரம் அதிகமாய் விட்டது. அவர் காற்றி னும் கடிய வேகமாகச் சத்தியாக்கிரகிகள் இருக்குமிடத்தை நோக்கித் தாவி வந்தார். இதற்குள் போலீஸ் அதிகாரிகள் அவருக்குக் குறுக்காக வந்து நின்று, சல்யூட் அடித்து மரியாதை செய்தவாறு, ' நீங்கள் போங்கள் சார் ! உங்களுக்குச் சிரமம் எதற்கு? நாங்கள் பார்த்துக் கொள்கிருேம் ' என்று சொன்னர் &öff.