பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரண - துரைக்கண்ணன் 221 சரிதானப்யா ! உங்கள் பவிசு தான் இதோ தெரிகிறதே ! கேவலம் இந்தக் காந்தி குல்லாக்காரன்கள் போலீஸ்காரர்களா கிய உங்களுடைய பெளருஷத்தைப் போக்கிவிட்டு உங்களைப் பிள்ளைப்பூச்சிகளாக்கி விட்டார்களே ! உங்களைக் கண்டால் துடை நடுங்கி ஓடி ஒளிய வேண்டியவர்கள் அவர்கள். ஆனால், இப்போது நீங்கள் சோற்றுக்கு இல்லாத இந்தக் காந்தி தொண் டர்களைப் பார்த்து நடுங்கிச் சாகிறீர்கள். சரிதான், போங்கள் வழிவிட்டு, நான் இவர்களைக் கவனித்துக் கொள்கிறேன். உங்க, ளுடைய உதவியொன்றும் எனக்கு வேண்டியதில்லை. ' என்று வீராப்பாகக் கூறிவிட்டு முன்ளுேக்கிப் போகலாஞர். போலீஸ் அதிகாரிகள் இவருடைய ஆணவப் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றனர். டி.புடி கமிஷனர் சிந்தனையுடன் அவ்விடத் தினின்றும் மெல்ல அகன்ருர். கள்ளுக்கடை முன் குழுமியிருந்த மக்கள் கூட்டம் பயபக்தியுடன் தம்பியப்பாவுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கலாயிற்று. சத்தியாக்கிரகிகளின் மறியலைக் கண்டு தயங்கி வெளியே நின்றிருந்த குடிகாரர்கள் சிலர் சின்ன முதலாளியின் வருகை யால் தைரியம் அடைந்து வேண்டுகோள் விடும் தொண்டர்களை விலக்கிக் கொண்டும், தரையில் படுத்திருக்கும் தொண்டர்களே மிதித்துக் கொண்டும் கள்ளுக்கடைக்குள் திமு திமு' வெனப் புகுந்தனர். இவர்களிடையே தம்பியப்பா துப்பாக்கியுடன் குறுக்கே பாய்ந்து, “ டேய், வயிற்றுச் சோற்றுக்கு வக்கற்ற சோம்பேறிப் பசங்களே ! எங்கள் கடையை விட்டுப் போகிறீர் களா? இல்லையா ! உங்களைத் தொலைத்து விடுவேன் தொலைத்து, ஆமாம்; சொல்லிவிட்டேன். உங்கள் உயிர் மீது ஆசையிருந்தால் உடனே போய் விடுங்கள் ' என்று ஓங்கிக் கூக்குரல் இட்டார். இது கேட்டு மக்கள் கூட்டமும் போலீஸும் கதிகலங்கி நின்ற னர். சத்தியாக்கிரகிகள் மட்டும் சற்றும் அசைந்து கொடுக்க வில்லை. இது இன்னும் தம்பியப்பாவிற்கு அதிக ஆத்திரத்தை உண்டு பண்ணியது. ' என்னடா நான் சொல்லுகிறேன், சிறிதும் சட்டை செய்யாமல் அப்படியே நிற்கிறீர்களே! நான் ஏதோ வாயால் சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா? இன்னும் ஒரு நிமிஷத்திற்குள் நீங்கள் கடையைவிட்டுப் போகவில்லையானல் பறவைகளைச் சுட்டுத் தள்ளுவதைப் போல் ஈவிரக்கமில்லாமல் உங்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ளிவிடுவேன்’ என்று உறு மினர். அத்துடன் நில்லாமல், தம் கையில் வைத்திருக்கும் துப் பாக்கியையும் தூக்கிப் பிடித்து அவர்களுக்கு நேரே குறி பார்ப் பது போல் நீட்டினர். х - அச்சமயம் மறியல் செய்யும் தொண்டர்களை மேற்பார்வை செய்தவாறு சமயோசிதம் போல் அவர்களுக்கு உத்தரவு பிறப் பித்துக் கொண்டிருந்த தளபதி பத்மனபன் முன்வந்து, ' பிள்ளை