பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 இராவணகாரம் வாள் ! எங்களைச் சுட்டுத் தள்ளப் போகிறேன் என்றுதானே சொல்லுகிறீர்கள்; காந்தி மகாத்மா கட்டளைப்படி தேசசேவை செய்ய வந்திருக்கும் எங்களுக்கு இந்தக் குண்டுப் பரிசு கிடைத் தால் அளவில்லா மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொள்வோம் என்று கூறி, தம்பியப்பாவிற்கு முன் நின்று தம் மார்பை நிமிர்த் திக் காட்டினர். கூட்டத்தோடு கூட்டமாக நின்று நடப்ப வற்றை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சி. ஐ. டி அனந்தனுக்குப் பத்மநாபனின் செயல் துணுக்கம் உண்டாக் கிற்று. நிலைமை எப்படித் திரும்புமோ என்ற கவலையுடன் அவன் பத்மநாபன் பக்கம் நெருங்கி நின்ருன், பத்மநாபனின் அமைதி யான வீரப்பேச்சு தம்பியப்பாவிற்கு அவரைக்கேலி செய்வது போல் தோன்றியது. ஆகவே, அவர் இராவணுவதாரம் கொள்ள லானர். அட துப்பாக்கிக் குண்டுக்கு முன் மார்பைத் திறந்து காட்டும் சூரப்புலியைப் பாருங்கடா ! இப்படிப் பகட்டிப் பேசி ல்ை நான் பிரமித்துப் போய்ப் பின்வாங்கிவிடுவேன் என்பது உன் நினைப்போ? அதெல்லாம் இந்த ஐயாவிடம் நடக்காது. நான் எச்சரித்திருக்கிறபடி உன் ஆட்களுடன் உடனே இவ்விடத்தை விட்டு நீ போகவில்லையானல், உங்களெல்லோரையும் சுட்டுப் பொசுக்கி விட்டு மறுவேலை பார்ப்பேன். ஜாக்கிரதை 1 என்று கூறிக்கொண்டே துப்பாக்கி முனையை அவர் மார்பின் மீது வைத்து அழுத்தினர். இது கண்டு அங்கு இருந்த எல்லோருமே (சத்தியாக்கிரகிகள் உட்படப்) பயந்துவிட்டார்கள். பத்பநாப னுக்குப் பக்கத்திலிருந்த அனந்தன் மட்டும் அச்சத்துக்கு இடங் கொடாது, திடீரெனப் பாய்ந்து தம்பியப்பாவின் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டான். அத்துடன் நில்லாமல், அவன் கண்மூடிக் கண் திறப்பதற்குள் தன்னுடைய மேல் துண்டை யுருவியெடுத்துத்தம்பியப்பாவின் கழுத்தில் போட்டுக்கைகளோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டான். இதுகண்டு 'ஆஹா...ஹா' என்ற பயப்பீதி ஒலி எல்லோரிடமிருந்தும் எழலாயிற்று. போலி ஸார் உட்பட எல்லோரும் பிரமைபிடித்து நின்றுவிட்டனர். சில விநாடிகள் கழித்து ஒரு கான்ஸ்டபிள் மட்டும் தூரப்போய் விழுந்து கிடந்த துப்பாக்கியை ஒடிச்சென்று தூக்கிக்கொண் L„fT(FðT , இராவணன் போல் வணங்காமுடியான தம்பியப்பா இவ்வித மான நிலையைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நிமிர்ந்து நின்று தன் விருப்பம்போல் எதையுஞ் செய்து அவர் பழக்கப்பட்டவர் அவருக்குத் தடையெதுவும் ஏற்பட்டு அனுபவமில்லை. அவர் பிறரைத் தட்டிக் கேட்டு ஆணையிட்டதைத் தவிர அவரை இதுவரை யாரும் தட்டிக்கேட்டு அறிந்தவ்ரில்லை. இப்போது இங்கும் தன்னை யாரும் தட்டிக் கேட்கமாட்டார்கள் என்று கருதியிருந்த அவருக்கு ஸி. ஐ டி அனந்தனின் தீரச்செயல்