பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி 7. என் மனுேரதத்தில் இடி விழுந்தது. என் ஆசையெல்லாம் நிராசையாயிற்று. முதலில் அப்புக்குட்டி முதலியார் வீட்டில் சாராயப்புட்டி புகுந்ததைப் பார்த்தபோது, நான் ஆசைப்பட்ட பழம் கிட்டிவிட்டது என்று சந்தோஷப் பட்டேன். வீட்டிற்குள் சென்ற அந்தச் சாராயப்புட்டி, பின்னல் செய்த வேலையைப் பார்த்தது, அந்தப் பழம் விஷமாய்ப் போவதற்குக் காரணமா யிற்று. அளவில்லாத துக்கத்துடன் அன்று படுத்தேன். பாட்டன் சொன்ன பழங்கதைகளெல்லாம் நினைவுக்கு வந்தன. நாவல்கள் எல்லாம் ஆபாசமாய்த் தோன்றின. அதற்குப் பிறகு ஒரு வாரத்துக்குள் கள்ளு, சாராயக் கடை களைத் தொலைத்துத் தலை முழுகினேன். அக் கடைகளில் சம்பாதித்த சொத்தையெல்லாம் அந்த ஊர்க் கோயிலுக்கும், பஜனை மடத்திற் கும், பள்ளிக்கூடத்திற்குமாக எழுதிவைத்தேன். இந்தத் தர்மங் கள் சரிவர நடப்பதற்கும் ஏற்பாடு செய்தேன். கையில் கொஞ்ச ரூபாய் எடுத்துக்கொண்டு தாயாரும் நானும் இந்தச் சென்னை நகருக்கு வந்து சேர்ந்தோம் ' என்று கூறி நண்பர் கதையை முடித்தார். மங்கள நூலகம், சென்னே-34 அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது.