பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரண - துரைக்கண்ணன் 223 திடுக்காட்டத்தை யுண்டுபண்ணியது. அவர் தன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டதோடு, ஒருவன் தன்னையும் துணி போட்டுப் பிடித்துக் கொண்டதை உணர்ந்து பேரதிர்ச்சிகொண்டு நின்றுவிட்டார். இப்பிரமிப்பிலிருந்து தன்னை சுதாரித்துக் கொள் வதற்கு அவருக்குச் சில விநாடிகள் ஆயின. யாரடா ! அவன் என்னைப் பிடிக்கிறது? என்னைத் தொடுவதற்குக்கூட ஒருவனுக் குத் தைரியம் வந்துவிட்டதா?’ என்று சொல்லிககொண்டே தன் தோள்களைக் குலுக்கி ஒரு உலுக்கு உலுக்கினர். இதல்ை சி. ஐ. டி. அனந்தன் சிறிது நிலைகுலைந்துதான் போனன். தன் பிடி தளர்வதை உணர்ந்து திடுக்கிட்ட அவன் மிகச் சிரமத்துடன் சமாளித்துக் கொண்டு தன் பிடியை இறுக்கலானன். தனக்கு உதவியாக ஸி. ஐ. டி. சகாக்களும் போலீஸ்காரர்களும் வருவார் கள் என்று எதிர்பார்த்து அவன் ஏமாற்றத்தையே அடைந்தான். போலீஸார் அவனுக்கு உதவி புரியாதது மட்டுமல்லாமல் சிலர் உபதேசமும் செய்யலாயினர். ' என்ன காரியம் செய்தாய், அனந்தன் ? . அவர் யார்? எப்பேர்ப்பட்ட செல்வாக்குடையவர் என உனக்குத் தெரியாதா? நம்ம இலாகா பெரிய அதிகாரிகள் கூட அவர் முன் கூழைக் கும்பிடு போடுவார்களே. ' ' அவரை விட்டு விடப்பா ! iணுக நீ ஏன் வம்பையும் ஆபத்தையும் விலைக்கு வாங்கிக்கொள்கிருய்? ' இது போன்ற பேச்சுக்கள் தான் அனந்தன் காதில் விழுந் தன. இது கேட்டு அவன் மனம்வேதனையடைந்தான். இங்கு நேரவிருந்த ஆபத்தான நிலைமையைச் சமாளிக்க என் கடமையைச் செய்தேன். இது தவரு? ' என்ற வார்த்தை கள் அனந்தனின் வாயிலிருந்து வந்தன. S. 1.க்கும், D.C.க்கும் தெரியாதா? ஏதாயினும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ருல் அவர்கள் சொல்ல மாட்டார்களா? அதிகப் பிரசங்கித்தனமாக நீ இப்படி நடந்து கொண்டாயே?’’ . . . * ஹெட் கான்ஸ்டபிள் ஒருவர் கோபமாகச் சொன்னர். 'டிப்டி கமிஷனர் என்ன சொல்கிருர்? கேளுங்கள்?" அனந்தன் சொன்னன். - சில கான்ஸ்டபிள்கள் சுற்று முற்றும் பார்க்கலாயினர். 'அவர் எங்கே இருக்கிருர்? அவர் போய் சிறிது நேரம் ஆயிற்றே ! ' என்ருர் ஒரு கான்ஸ்டபிள். - " ஏதோ தெரியாத்தனமாய் செய்தது செய்துட்டே. அவரை விட்டுட்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப்பா