பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 இராவணகாரம் அனந்தனைப் போல உள்ள ஒரு சி. ஐ. டி சொன்னர். இதற் குள் இலாவகமாக கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்த துண்டை எடுத்துத் தோள்களைச் சேர்த்துப்பின் கட்டாகக் கட்டிப் பிடித்துக் கொண்ட அனந்தன் ஊ ஹாம்...நான் இவரை விட முடியாது. இவரை விட்டால் அடுத்த கணம் ஆபத்தான நிலைமை தான் ஏற்படும். பிடித்தது பிடித்து விட்டேன். இவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று இன்ஸ்பெக்டரிடம் ஒப் படைத்து விடுகிறேன். அவர் என்ன வேண்டுமானலும் செய்து கொள்ளட்டும். எனக்கு அக்கறையில்லை . அனந்தன் உறுதியான குரலில் சொன்னன். அவன் தம்பியப் பாவைப் பிடித்திருந்த பிடி அவனுடைய சொல்லைப் போலவே அழுத்தமாயிருந்தது. போலீஸாருக்கும் மற்றவர்களுக்கும் திகைப்பு அதிக மாயிற்று. மற்றவர்களைப் போலவே திகைத்துப் போய்ச் செயலற் றிருந்த பத்மனபன் இச்சமயம் அனந்தனே நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தார். - அதற்குள் அனந்தன் தம்பியப்பாவைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போலீஸ் வேனே நோக்கிச் சென்ருன். ஆஜானுபாகு வான தம்பியப்பா அவனுடைய பிடியிலிருந்து விடுபட எப்படி யெப்படியோ திமிறிப் பார்க்கலானர். அவருடைய ஜம்பம் ஒன்றும் சாயவில்லை. அவன் பிடி உடும்புப் பிடிபோல் இரும்புக் கணக்காய் இருந்தது. எங்கோ போய்விட்டு வந்த சப்-இன்ஸ்பெக்டர், அனந்தன் தம்பியப்பாவை மேல் துண்டினல் இரு கரங்களையும் பின் கட்டாக இறுக்கிக் கட்டித் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்துவிட்டு, 'அனந்தன் ! என்ன காரியம் செய்துட்டே! நீ?' என வியப்பும், விதிர்ப்பும் மேலிடக் கூறினர். ' என் கடமையைச் செய்தேன் சார் ' எனச் சொல்லிக் கொண்டே திரும்பிப் பாராமல் போகலானன். ஒரு கான்ஸ் டபிள் அவன் காதருகேசென்று, நீ பலே ஆளப்பா ! உன் தைரியத்தைப் பாராட்டுகிறேன் ' என்ருன். 'உங்க பாராட்டுக்கு நன்றி ஐயா ! எனக்குத் தைரிய முண்டாக்கியது சத்தியாக்கிரகப் படைத் தளபதியின் அஞ்சா நெஞ்சம்தான். கள்ளுக் கடைக்காரரின் குண்டுக் குறிக்கு ஆளாக இருந்த அவர் எங்கள் ஊர்க்காரர். மலையாளி' என்று அனந்தன் உற்சாகமாகச் சொன்னன்.