பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரண - துரைக்கண்ணன் 225 'ஓ ! அப்படியா சங்கதி !' என்ற கான்ஸ்டபிள், எது காரணமாக இருந்தாலும், நீ இப்பொழுது செய்துள்ளது அபாரச் செயல் ஆகும்” என்று கூறிவிட்டு நகர்ந்தான். கடைசியாக, அனந்தன் போலீஸ் வேணண்டை சென்று. ' கொஞ்சங் கதவைத் திறவுங்கள், ஐயா !” என்று கூறினன்; பிரமிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு, போலீஸ் வேனில் ஏற்றியிருந்த தொண்டர்களைக் காவல் புரிந்து கொண்டி ருந்த போலீஸார் அனந்தன் அதிகாரத் தோரணையோடு கதவைத் திறக்குமாறு கூறியதைக் கேட்டுச் சிறிதுந் தயங்காமல் கதவைத் திறந்து விட்டனர். உடனே அனந்தன் தம்பியப்பாவின் முதுகில் தட்டி, ஊம்; வண்டியில் ஏறுங்க’’ என்று சொல்லித் தோள் களைக் கட்டியிருந்த துணியை இறுக்கித் தூக்கித் தள்ளின்ை. எப்படியும் விடுபட முடியாத நிலையில வேறு வழியின்றித் தம்பி யப்பா வண்டியில் ஏறிஞர். அனந்தனும் ஏறலாளுன். இச்சம யத்தில் சில போலீஸ்காரர்கள் ஓடிவந்து வேனில் ஏறிக் கொண் டனர். அனந்தன் கதவைச் சாத்திக் கொண்டு, 251 வேனே இராயப்பேட்டை ஸ்டேஷனுக்கு ஒட்டு 1 இல்லை...இல்லை, போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு ஒட்டு' என்று கூறினன், டிரைவர் கான்ஸ்டபிள் ; வேனில் இருந்த மற்றக் கான்ஸ்டபிள் களை ஒரு விதமாகப் பார்த்துவிட்டு வண்டியை வேகமாக ஒட்ட லானன். சத்தியாக்கிரகிகளான தங்களைச் சிறை செய்து செல் வதற்காக வந்த போலீஸாரில் ஒருவன், கள்ளுக்கடைச் சொந்தக் காரளுெருவனையே கைது செய்து கொண்டு வந்த அதிசயத்தைக் கண்டு தொண்டர்கள் மகிழ்ச்சியாரவாரம் செய்யலாயினர். இந்த உற்சாகத்தில் அவர்கள் பாரத மாதாகி ஜே மகாத்மா காந்திக்கு ஜே ! என ஜே கோஷம் போடலாயினர். - இதுவரை மந்திரத்தால் கட்டுண்ட பாம்பைப் போல் உணர் வற்று, நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் போலீஸ்வேன் போனதும் பரபரப்படைந்து பலவிதமாகப் பேசிக் கொள்ளலாயினர். தங்கள் சின்ன எஜமானையே ஒரு சி ஐ.டி. கட்டிப் பிடித்து விட்டானே என்ற பயப்பிரமையால் செயலற்று இருந்த கள்ளுக் கடையாட்களும், குடிகாரர்களும் ஆளுக்கு ஒருவிதமாகப் பேசி ஆர்ப்பரிக்கலாயினர். கடைத் தலைமைக் குமாஸ்தா ஒரு சி.ஐ.டி. தம்பியப்பாவைப் பிடித்துக் கொண்டு போன செய்தியை முதலாளியிடம் போய்ச் சொல்ல சிப்பந்திகள் சிலரை ஏவிஞர்: சிலர் வெளியே வந்து ஆய்...ஊய்...' என்று கூவி விகாரமாகக் கை கால்களை ஆட்டலாயினர். எஞ்சியிருந்த போலீஸார், பிரமை பிடித்துப் போய் நின்றிருந்த சததியாக்கிரகத் தொண்டர் கr-15