பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். சூடாமணி 22 உள்ளும் புறமும் ஒட்டலின் குடும்ப அறை"க்குள் நுழையு முன்பு சிறிது நின்று சுற்று முற்றும் பார்வையை வீசிய முத்து, ' இன்னும் ரமணன் வரவில்லேன்னு தோணுது’’ என்ருன். { அருகில் நின்ற அவன் மனைவி வள்ளி நாம் போய் உட்கார லாம் வாங்க. அவர் வரப்போ வரட்டும் ' என்று அலுப்புற்ற குரலில் கூறினுள். . அது நல்லாயிருக்குமா? ஸ்பெஷலாய் இங்கே வந்து எங் களோடு சாப்பிடுன்னு அழைப்புக் கொடுத்துட்டு அப்புறம் அலட்சியப்படுத்தருேம்னு அவனும் அவன் பெண்டாட்டியும் நினைச்சுகிட்டால்?’’ , - . "நினைச்சால் நினைக்கவேண்டியதுதான். அதுக்கு நாம் என் னங்க செய்யறது? சொன்ன டயத்துக்குச் சரியா வரலேன்ன யார் தப்பு அது அந்த பங்ச்சுவாலிடியெல்லாம் வெளியூர்க் காரங்க கிட்டேதான் கத்துக்கனும், நம்மவங்களுக்கு எங்கே!” முத்துகிருஷ்ணனுக்கு நாற்பத்து மூன்று வயது, பிறவிப் பணக்காரன் மட்டுமன்றிப் பிரபல தொழிலதிபர் கூட. உணவு வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வாணிபம் மிகச் செழிப்பாய் நடந்துகொண்டிருந்தது. அவ்வப்போது வெளி நாட்டுப் பயணங்களுக்காக அவன் கிளம்பும்போது வள்ளியும் உடன் செல்வாள். அந்நாடுகளில் அவளுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டி ல்ை அவையே நாகரிகத்தின் உறைவிடமாகவும் தன் சொந்த மண் பாமர நாடாகவும் தோன்றியது. புக்ககம் வந்துவிட்ட புதுமணப்பெண் பிறந்தகத்துக்கு ஏங்குவதுபோல் 'எங்கேயானும்