பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 உள்ளும் புறமும் ஃபாரின்லே போய் ஸெட்டில் பண்ணிடலாங்களே!’ என்று அடிக்கடி கூறுவாள். முத்து பட்டதும் படாததுமாக ஒரு பார்வை அவளைப் பார்த் தான். அதில் அவன் மனத்தில் குழம்பிக்கொண்டிருந்த சஞ்சலங் களெல்லாம் நிழலாடின. 'நீ உள்ளே போய் உட்காரு. நான் அவங்க வந்ததும் கூட்டி கிட்டு வரேன்.” 'ஒட்டல் பையன் எவனண்டையாவது சொல்லி அவங்களை உள்ளே அனுப்பச் சொன்னல் போச்சு. அதுக்காக நீங்களேதான் காவல்காரன் மாதிரி நிற்கணுமா என்ன?’’ 'ரமணன் என் நண்பன், வள்ளி! ஞாபகமிருக்கட்டும். நாங்க ரெண்டுபேரும் ஒண்ணுப் படிச்சவங்க. ஒண்ணு சத்தியாக்கிரகம் செய்தவங்க. ஒரே கொள்கையைக் கடைப்பிடிச்சவங்க." அவன் முன், காலம் சரிந்தது. அந்தக் கொள்கை, அந்தச் சத்தியத் தீவிரம்... அகிம்சையின் வழியிலேயே போராட்டம் நடத்தி அன்னிய ஆட்சியை முறியடிக்க அன்று அறைகூவல் எழுப்பிய ஒர் எளிய, மெலிந்த, முதிர்ந்த உருவம் அவன் மனத்தில் தெளிவாக எழுந் தது. அன்பே வடிவான அந்தத் தூய திருவுருவம், அந்த மகான், ஆயுதமின்றியே போர் நடத்தி அதில் வெற்றியும் கண்ட புது மையை உலகமே பார்த்து அதிசயிக்கவில்லையா? பகைவனை வெறுக்காமல் அநீதியை மட்டுமே வெறுத்த அந்த அகிம்சைத் தளபதி காட்டிய நெறியில், அன்று அடிமைப்பட்டிருந்த நாட்டில் பலகோடி இதயங்கள் விழிப்படைந்து வீறு கொண்டன. சத்திய மும் அகிம்சையும் வீரததின் மறு பெயர்கள் என்பதைத் தம் ஒவ்வொரு செயலிலும் நிலை நிறுத்திக் காட்டினர் அவர். அந்த நினைப்பிலேயே முத்துவுக்கு மெய்சிலிர்த்தது. நாடு முழுவதிலும் அன்று சிம்ம கர்ஜனையாய் ஒலித்த அந்தச் சத்தியப் பெருமுழக்கம் தீமூட்டிச் சுடரெழுப்பிய எண்ணற்ற வாலிப உள்ளங்களில் அவனுடையது. கோபியினுடையது... கோபி என்னவானன்? அவன் இருக்குமிடமே தெரிய வில்லையே?... போகட்டும். இத்தனை ஆண்டுகளில் அவ்வவ்போது ரமணனேயேனும் சந்திக்க முடிந்ததே. "என்ன அப்படிப் பிரமிச்சுகிட்டு நிற்கlங்க?" 'நீ உள்ளே போ வள்ளி, சொன்னேனில்லே?"