பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 30 உள்ளும் புறமும் ' என்னடா சாப்பிடறே, ரமணு?’ என்ருன் முத்து: 'உனக்கு எது இஷ்டமோ கொண்டுவரச் சொல்லேன் சரி, முதல்லே சூடாய் வெஜிடபிள் ஸ்மோஸா: அப்புறம் க்ரீன் பீ மஸாலா, பாதாம் அல்வா, உருளைக்கிழங்கு கட்லெட், அதன் கூட தக்காளி, பட்டாணி, லெட்யூஸ் இதெல்லாம் சேர்த்துந்தான். அப்புறமா காப்பி, ஐஸ்காப்பியாவே இருக் கட்டும், என்ன ரமணு?’’ 'ஓ கே ! வாட் எவர் யூ ஸ்ே, ’’ அந்தப் பொருள்களின் பட்டியலே ரமணனுக்கும் சீதாவுக் கும் அஜீரணம் ஏற்படுத்திவிடும் என்ற நினைப்பில் சிறிது உற்சாகம் கொண்டவளாய் வள்ளி சீதாவை நோக்கிச் சிக்கன மாக ஒரு புன்னகை உதிர்த்தாள். ஆனல் தம்மிருவருக்கும் கூட இம்மாதிரி உணவு பழக்கம்தான் என்று காட்டிக்கொள்பவனுக ரமணன் முகத்தில் எவ்விதத் திகட்டலும் இன்றி இயல்பாக, ‘' நல்லவேளை போன தடவை நாங்க இங்கே வந்தப்போ வெஜி டபில் புலாவும் பட்டர் மசாலா தோசையும் குலோப்ஜானும் சாப்பிட்டோம். நீ அதையே சொல்லாதது நல்லதாப் போச்சு, அப்புறம் என்ன சமாசாரம் முத்து? மெட்ராஸில் எத்தனை நாள் இருப்பே?’ என்ருன். இன்னும் ரெண்டு நாளில் ஊட்டிக்குக் கிளம்பறேன். நீயும் வாயேன் குடும்பத்தோட ’’ ' குடும்பத்தோடா நாலு குழந்தைகளப்பா எனக்கு 'பரவாயில்லை. எனக்கும் தான் ரெண்டுபேர் இருக்காங்க! ’’ "ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கொரு பிள்ளை வேண்டி யதுதான். ரெண்டும் நிறைய இருக்குதே உனக்கு முத்து ' " உனக்கு மட்டும் என்ன குறைச்சல் ? என்னைப் போல பிஸினஸ்மேனு இல்லேன்னலும் நீயும் தான் கைநிறையச் சம்பா திக்கிற வேலை பார்க்கறே. அதுவும் தவிரப் பெரிய எழுத்தாளன் வேறே !' - - ரமணன் மிகுந்த செருக்குடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். " ஆமாம். நாற்பத்திரண்டாம் வருஷம் மாணவர்களாய் இருந் தப்போ நாம் கிளர்ச்சி, மறியல் எல்லாம் செய்திருக்கோமே அந்த நாளிலே காந்திஜியாலே நாம் இன்ஸ்பைர் ஆனேமில்லையா? அதல்ை தான் நான் ஒரு எழுத்தாளன் 1’ . . - * - "ஆமாம், அவர் கொள்கைகள் ஒவ்வொண்ணைப் பத்தியும் தான் பல புத்தகங்கள் எழுதியிருக்கியே! :