பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 உள்ளும் புறமும் பெண்கள் முன்னேற்றம்தான், ' அவர் நினைவுக்கு நீ செய்யற நல்ல பணி இந்த மாதிரி புஸ்தகங்கள் நீ எழுதறது. ஏதாவது சொல்லேன் அந்தப் புஸ்தகங்களைப் பத்தித்தான் ! ' அதை ஏன் கேக்கறே ! ரமணன் திடீரென்று ஆவேச மாய்ப் பேசிஞன். அந்த பப்ளிஷர் இருக்கானே, ஒண்ணும் நம்பர் . .ப்ராட். சரியாகவே பணம் கொடுக்கறதில்லை. புஸ்தகம் எழுதறவன் என்ன, தானமா செய்யருன் ? காந்திஜி பேரைச் சொல்றதிலே எனக்குப் புகழ் கிடைக்குது, இல்லேன்னு சொல்லலே. ஆனல் அது மட்டும் போதுமா ? புகழும்தான் வேனும், பணமும்தான் வேணும். இரண்டுக்காகவும்தான் நான் எழுதறேன். என்னை அந்த ஆள் மோசம் செய்யருப்பலே நானும் அவனுக்குச் செய்யப்போறேன். அடுத்ததாக என்னை அவன் புஸ்தகம் எழுதித் தரச் சொல்றப்போ நான் எழுத மாட்டேன். இவனுக்கு எழுதித்தரதைவிட ஒரு சினிமாவுக்குக் கதை எழுதிக் கொடுத்தாலும் ஆயிரக் கணக்கில் வாரிக் குவிக்க லாமே ! ஏதோ காந்திஜி பேரைச் சொன்ன நமக்கு ஒரு மதிப் பாச்சேன்னு பார்த்தால்...' ' நம்ப யாருக்குமே அந்தப் பெயரைச் சொல்லத் தகுதி இல்லேடா ! என்று கத்தவேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. தன் நாடே ஆத்மாவை இழந்துவிட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இங்கு விடுதலைப் போரை முன்னின்று நடத் தியவர் ஒரு மகாத்மா. அதிலிருந்தே அந்தப் பேரின் இயல்பு புரியவில்லையா ? சாத்விக வீரமும் சத்தியத்தின் வலிமையும் அகிம்சையின் ஆண்மையும் நேர்மையான லட்சியங்களின் அஞ்சாமையும் புனிதர்களின் தியாகமும் படைகளாய் இலங்கிச் சாதித்த வெற்றி நம்முடையது. இப்போதெல்லாம் நடை பெறும் மறியல், வேலை நிறுத்தம், சத்தியாகிரகம், ஒத்துழை யாமை இவற்றுக்கும் முன்பு நடந்தவைக்கும் சாரத்திலே எத்தனை வேறுபாடு! இப்போது இவற்றுக்கெல்லாம் அடிப் படை நோக்கம் சுயநலம் தான். முன்போ? அந்த மகான் உண்ணுவிரதம் மேற்கொண்ட போதெல்லாம் அதன் நோக்கம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதும், நிகழும் குற்றங் குறைகளுக்கு ஒரு கழுவாயாக நோன்பு வடிவமாய் இறங்குவதும் தான். இப்போது எங்கும் சுயநலம் மலிந்த சூழ்நிலையில் முக்கிய நாட்களிலும் கூட்டங்களிலும் சொற்பொழிவுகளில் அடிபடும் ஒரு பெயர் மட்டுமாக நின்றுவிட்டாரே! பெரும் பான்மையோர் அவர் கொள்கைகளைக் காற்றில் விட்டுவிட்டார் களே! அவர்கள் யாவரும் அவருக்கு வாய்ப்பூஜை செய்வதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தில் அவர் தத்துவங்களுக்கு உயிரளித்