பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். சூடாமணி 28 ጃ தால் இந்தப் பாரத மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு காந்தியாகி விடமாட்டார்களா ! ஏனெனில் அண்ணலே கூறி யிருக்கிருர் : நான் ஏதும் செயற்கரியது செய்துவிடவில்லை: நான்சாதித்தது ஒவ்வொருவரும் சாதிக்கக் கூடியதுதான். ' ரமணன் இப்போதும் தன் மனைவியை நோக்கிச் சினப் பார்வையை அவ்வப்போது வீசிக் கொண்டிருந்தான். அற்ப விஷயத்துக்கெல்லாம் வெளியிடும் பொருமையில்ை மனைவியை அவமதிக்கும் இவன் மகாத்மாவின் பெண் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களை விரும்பி எழுதுகிருளும் ! என்ன கேலி இது ! பெண்ணுக்கு அவர் எத்தகைய சுதந்திரமெல்லாம் கொடுக்க வேண்டுமென்ருர் சொந்த வாழ்வில் மட்டுமன்றி நாட்டு விடு தலைப் போராட்டத்திலும் ஆணுக்கு நிகராய் அவள் இலங்க வேண்டுமென்ருர். அவ ளு க் கு க் கல்வி அவசியமென்ார். குழந்தைகளின் மனத்தைப் பக்குப்படுத்திப் போதிப்பதிலே அவளுக்குத்தான் முக்கிய பங்கு என்ருர். அவ்வாறு பெண்மை யில் தாய்மைக்கு மதிப்பளித்துப் போற்றியவர், நாட்டுப் பிரிவினையை அடுத்து நிகழ்ந்த வகுப்பு வெறியாட்டத்தின் புயலிலே கற்பிழக்கும் கொடுமைக்கு ஆளான பெண்களின் விஷயத்தில் எத்தகைய கம்பீரமான, மனிதாபிமானக் கருத்தை முழங்கினர் ! . - அந்த நினைவிலேயே அந்தப் பழைய பேய் வெறியும் அதற் குப் பலியாகி அலமந்து நின்ற பெண் வடிவங்களும் அவன் கண் முன்னே காட்சியாய் எழுந்து நின்றன. கூட்டம் கூட்டமாய் அந்தப் பெண்கள் மரத்துவிட்ட உயிருக்குச் சாட்சியாய் பேய் கண்டவை போன்ற விழிகள் எதிரே நிலைகுத்தி வெறித்து நோக்கும் தோற்றம். இனி இழக்க எதுவுமே மிச்சமில்லை என்னும் கடைநிலையின் பரிபூரணத் துன்பம் நிராசையாகக் கவிந்துகொண்டுவிட்ட சாம்பிய கோலம். அவர்களில் ஒரு பெண்-அவள் பெயரைக் கூடப் பிறகு யாரோ சொன்னர் களே, என்ன அது?...ஆம், மிருளுளினி. தீடீரென்று உணர்ச்சித் துடிப்பின் வேகத்தில் அந்தப் பெயர் கூட மின்வெட்டுப்போல் நினவுக்கு வந்துவிட்டது-அந்தப் பெண் அதிர்ச்சியில் மரத்துப் போன நிலையில், அவலத்துக்கு ஒரு கண்ணுடி போல, வெறும் மனிதச் சிதிலமாகப் பிரமித்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்த வாறு அவனும் மற்றவர்களும் பயங்கரத்தில் உறைந்துபோன இதயத்தோடு கல்லாய் நின்ற நினைவு. இப்போது சாணதீட்டிய கத்திபோன்ற கூரிய தெளிவுடன் அவனுள் எழுந்தது. அத்தகைய அபலேயரின் சார்பில் அந்தக் கருளுமூர்த்தி எழுப்பிய நியாயத்தின் குரலும் இப்போது அவன் காதுகளில் ஒலித்தது : - -