பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 உள்ளும் புறமும் ' அவர்களுடைய குற்றம் இதில் ஏதும் இல்லை. அவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள். இவ்வாறு பலியான பெண்களை மணந்து கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும். ' இவன் இந்த ரமணன் மனைவி இன்ைெருவனுடன் வலுவில் பேசிவிட்டாள் என்பதற்காகச் சினந்து நோக்கும் இந்தக் குறுகியவன்! இவ ைஎழுதுகிருன் அவருடைய மாதர் முன்னேற்றக் கொள்கையைப் பற்றி ! போலி, போலி. ரமணன் சின்னமிட்ட போலித்தன்மை சமூகம் முழுவதிலுமே புரையோடியிருக்கிறது. தான் மட்டும் என்ன ? காந்தியடிகளில்ை ஈர்க்கப்பட்ட அந்த மாணவ இளைஞ னின் ஒளிமிக்க விழிகள் என்னவாயின ? அந்த உத்தமருக்கு ஆட்பட்ட உள்ளம் வெறும் கணநேரத் துடிப்பாக, இளமை ஆர்வத்தின் ஒரு தெறிப்பு மட்டுமாக, மாண்டு போய்விட வில்லையா? அந்தத்துாய லட்சியங்களையெல்லாம் மறந்து அவன் உலக வாழ்வின் புற வெற்றிகளுக்குத் தானே தன்னைத் தந்து கொண்டுவிட்டான்? அதில் உண்மைச்சத்து இல்லாததால்தானே இப்போது வாழ்வில் இந்த அலுப்பும் தோல்வி புணர்வும். அண்ணல் கூறியிருக்கிருரல்லவா ? நேர்மை, சத்தியம் போன்றவைகளை ஏதோ அரிய தெய்வீக குணங்களென்று கருத வேண்டாம். அவை மனிதப் பண்புகள்தாம். உண்மையான மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய குணங்கள்தாம்’, அதாவது, அவை இருப்பது தனிப்பட்ட பெருமையல்ல. அவை இல்லாதவன் தான் விலங்கினம். அபப்டிப் பார்த்தால் அவன் மனிதனுகவே வாழவில்லை. தாங்க இயலாமல் மூச்சு முட்டுவதுபோன்ற உணர்வில் அவன் சட்டென்று எழுந்து நின்ருன். ' எல்லாரும் சாப்பிட்டாயிடுச் சில்லே? போகலாமா? ரமன. நீயும் உன் மிஸஸ்ஸும் இப்படி, எங்ககூட வீட்டுக்கு வந்துட்டுப் போங்களேன்' என்று, சீதாவின் பக்கம் கவனமாய் முதுகைத் திருப்பிக்கொண்டு கேட்டான். வள்ளியின் முகம் சிணுங்கியது. இவர்களும் என்னதான் வசதியுள்ளவர்கள் என்ருலும் தம்மைப்போல் லட்சாதிபதி அல்லவே! எவ்வளவுக்கென்று ஒட்டிக்கொள்வது? - "அவங்களுக்கு எத்தனை வேலையோ என்னமோ பாவம் ! நம்ம பங்களாவுக்கு வர நேரமிருக்குமா?' என்ருள். சீதாவுக் குச் சுருக்கென்றது. - - - . ஆமாம், நாங்க என்ன, வேலையத்தவங்களா ? அவர் இன்னிக்கு ஒரு முழு அத்தியாயம் எழுதியாகணும் தாங்க நேரே