பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். சூடாமணி 237 வீட்டுக்குப் போயிடருேம். மிஸ்டர் முத்து கிருஷ்ணன் உங்க அழைப்புக்கு நன்றி ' என்று சீதா அவனை நோக்கிக் கரங் குவித்தாள். ரமணனின் முகம் தழலாய்ச் சிவந்துவிட்டது. இவள் என்ன தம்மிருவருக்காகவும் முடிவு செய்து ஒர் ஆண்பிள்ளையிடம் சொல்வது என்ற நினைப்போ ?

  • நீ பேசாமலிருக்கமாட்டே, சீதா ? நாங்க உன் வீட்டுக்கு வரோம் முத்து. நாம் ரெண்டுபேரும் எப்பவோ சந்திக்கருேம். நிறையத்தான் பேசுவமே ! மனைவி மீது தன் அதிகாரத்தை நாட்டிவிட்ட பெருமையில் அவன் வேண்டுமென்றே சீதாவைப் பார்த்துச் சிரித்தான்.

முத்துவின் பளபளக்கும் அம்பாஸிடர் வண்டி நால்வரை யும் சுமந்துகொண்டு மெளண்ட் ரோட்டிலிருந்து தியாகராய நகருக்குப் பாய்ந்தது. அழகிய முகப்பு வாசல் அமைந்த நாகரிகமான கட்டடத் தின் முன் கார் நின்றதுமே உள்ளேயிருந்து குட்டைப் பாவாடை யும் கழுத்தளவு முடியுமாக ஒரு சிறுமி ஓடிவந்து டாடி, வந்து பாரேன், அண்ணு கிட்ட இன்னிக்கு ஒரு காக்காய் மாட்டிக் கிட்டுது : ' என்று கிளர்ச்சி வெடிக்கும் குரலில் கூவி முத்துவின் கையைப் பற்றி இழுத்துச் சென்ருள். : பின்புறத் தோட்டத்தில் செடிகளுக்கிடையே ஒரு காகம் செத்து விழுந்திருந்தது. கையில் துப்பாக்கியுடன் அதைப் பெரு மிதத்துடன் பார்த்தவாறு மண்டியிட்டிருந்தான் முத்துவின் மகன். மேலே கூட்டமாய்க் காகங்கள் பெருத்த இரைச்சலுடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. " காக்காயை ஷாட் செய்துட்டேன்! செத்தே போச்சு டாடி! என் குறி இப்போ எவ்வளவு நல்லா ஆயிட்டுது தெரியுமா? இன்னிக்குத்தான் என் முதல் பெரிய லக்ஸஸ் 1’ என்று பையன் தந்தையைக் கண்டதும் கும்மாளமிட்டான். முத்துவின் உடல் கூசிச் சுருங்கியது. மகன் ஆசைப்பட்ட தற்காக ஏர் கன் வாங்கித் தந்தவன் அவன்தான். இப்போது அந்தக் குறி அவனுள்ளேயே பாய்ந்து விட்டாப்போல் உயிர் துடித்தது. . . . . ." - பையன் கெட்டிக்காரளுயிருக்கானே ! .' என்று ரமணன் பாராட்டினன். ' அதிருக்கட்டும் ரமன, உன் குழந்தைகளை நான் அதிகம் பார்த்ததே இல்லையே, நாளைக்குக் கூட்டிக்கிட்டு வரியா? என்று