பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 உள்ளும் புறமும் பேச்சை மாற்றிய முத்து மகனைப் பார்த்து, " நீ உள்ளே போ. அப்புறமா உன்னேடு பேசிக்கறேன் ' என்று கடுகடுத்தான். அதுக்கென்ன முத்து, கூட்டிக்கிட்டு வரேன். என் இரண் டாவது பயல் உன் மகன்கிட்டேயிருந்து இந்தச் சாமர்த்திய மெல்லாம் கற்றுக்கட்டுமே : ' வேணும், வேணும். சின்னக் குழந்தைக்கு இதெல்லாம் எதுக்கு ? பத்து வயதுதானே ஆகுது அவனுக்கு ? நல்லாப் படிக் கருன ? ’’ 'ஏதோ, பேருக்குத்தான் ! ’’ ' தவருமல் பாஸ் பண்ணிகிட்டு வரானில்லே ? . பாஸ் பண்றதுக்குப் படிக்கணுமா என்ன ? ரமணன் அவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினன். அதன் பொருள் புரிந்தபோது முத்துவின் நெஞ்சம் பின்னும் சுருங்கிக் கொண்டது. எல்லோரும் ஹாலில் அமர்ந்து உரையாடிய போதெல் லாம் தமது பகட்டான உடையணிந்த வடிவங்களிடையே அரையில் உடுத்த ஒரே ஆடையுடன் ஒர் எளிய முதிய மோகன உருவம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த படத்தி லிருந்து தங்களை மூக்குக்கண்ணுடிக்குப் பின்புறமிருந்து பார்த்த வாறு தேனூற்ருய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்த காட்சியை அவளுல் தாங்க முடியவில்லை. அந்தப் புன்னகையில் கண்டனம் இல்லை. எதிராளியையே வெறுக்காத அன்பின் மந்தகாசம் அல்லவா ? அது அவர்களுக்காகப் பரிதாபம் தான் காட்டியது. இதைவிடப் பெரிசாய்க் காந்திஜியின் படம் நான் என் வீட்டில் மாட்டி வச்சிருக்கேன் ' என்ருன் ரமணன். முத்துவின் உடல் எரிந்தது. அகிம்சையாளரின் பெயரில் கட்டடங்கள் எழுப்பிவிட்டு மகனுக்குத் துப்பாக்கி வாங்கித் தருபவனும், சத்தியத்தின் பூஜாரியைப்பற்றி நூல்கள் வரைந்து விட்டு மகனின் தேர்வுக்காக லஞ்சமளிப்பவனும் கூடும் இடத்தில் அந்த மகான் ஏன் நிற்கிருர் ? போலிகளிடையே அவருக்கு என்ன வேலை?. அவர்களிடையே அவர் நின்ருல், எளியவர் துயர்துடைக் கும் பொருட்டுப் பகை நடுவில் அஞ்சாது நடந்த மெலிந்த பொற்பாதங்கள் கறைபடாவோ? இவ்வாறு பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமின்றி வாழும் தம்மிருவரைவிடப் பெயரைப் போலியாக உபயோகிக்காமல் ஒரேயடியாய் அவரை மறந்துபோன கோபி எத்தனையோ மேல்.