பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 உள்ளும் புறமும் இப்போவா? எனக்கு வேலை இருக்கே. இன்னொரு நாள் வேணும்ன..... ; : டோண்ட் பி.எ. வெட்பிளாங் கெட். எனக்கு எத்தனை நாளா கோபியை மறுபடியும் சந்திக்கணும்னு ஆசை தெரி யுமா? ஊட்டியிலேருந்து திரும்பியதும் நான் ஊருக்குக் கிளம்பிடுவேன். தறசெயலாய் இப்போ நாம் மூணுபேரும் ஒரே ஊரில் இருக்கோம், சும்மா வா போகலாம். ' ரமணனல் மேலும் மறுக்க முடியவில்லை. இரு பெண்களும் தம் கணவரின் நண்பனைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டாததால் வள்ளியை அங்கேயே விட்டு விட்டு, சீதாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு, முத்து, ரமணனுடன் அம்பாஸிடரை அயனுவரத்துக்கு ஒட்டிச் சென்ருன். மாலைப் பொன் கருக்கத் தொடங்கும் நேரமாகி விட்டதே, கோபி சினிமாவுக்கோ கடற்கரைக்கோ போயிருப்பானே என்று சுயவழக்கத்தின் சுவட்டில் இயல்பாய் எழுந்துவிட்ட அவன் எண்ணம் முற்றுப்பெறு முன்பே வாசலில் ஒரு வடிவம் வந்து நின்றது. சிறிது நேர மெளன. வெறிப்புக்குப் பிறகு, எதிரேயிருந்த வனின் முகமெங்கும் புன்முறுவலின் அலே ஒன்று படர்ந்தது,

  • முத்து 1 முத்துதானே ? வா வா ! என்ன ஆச்சரியம் ! எத்தனை காலமாச்சு நாம் சந்தித்து ! சொப்பனம் மாதிரி இருக் குடா! நிஜமாகவா நீ வந்திருக்கே, முத்து ? கோபி முன்னல் விரைந்து வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டான்.

" நான் அன்னிக்கு ரமணனச் சந்திச்ச வேளை நல்லவேளை தான்! பழையநாள் சிநேகிதன்களில் ஒருவனைப் பார்த்த ஒரு மாசத்திலேயே இன்னொருவனையும் பார்க்கற சந்தர்ப்பம்ன சும்மாவா? வா, வா! வா, ரமளு!' மகிழ்ச்சியுடன் தம்மை வரவேற்று வீட்டினுள் அழைத்து அமரச்செய்த நண்பன முத்து உன்னிப்பாகப் பார்த்தான். ரமணன் சொல்லியிருந்தது உண்மைதான். கோபி அடையாளம் தெரியாமல் தான் மாறியிருந்தான். தம் மூவருக்கும் ஒரே வயதுதானென்ருலும் வசதியின் காரணமாய்த் தாமிருவரும் இளமையின்மீதே இளைப்பாறியிருக்க, கோபி மட்டும் கிழவனகிக் கொண்டிருந்தான். ஆனல் அவன் பேச்சிலும் பழக்கத்திலும் பழைய நட்பு அணி செய்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவனைச் சந்தித்ததில் அவனுடைய நீரோட்டமான சரளத் தன்ம்ை தனிப்பட்ட ஒரு மகிழ்ச்சியைத் தந்தது. - ... ."