பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். சூடாமணி 241 நீ எப்படி இருக்கே கோபி ? உன்னை ஆயிரம் கேள்விகள் கேட்கணும் போல இருக்குடா, ஆல்ை ஒண்னுமே கேட்கத் தோணலே ! உன்னைப்பத்தி எல்லாம் சொல்லு. ' கோபி விவரித்தான். சராசரியான, வியப்புறுத்தும் தன்மை எதுவுமற்ற எளிய வாழ்வு அவனுடையது. பாரதத்தின் கோடிக் கணக்கான மாந்தருள் அவனும் ஒருவன், அவ்வளவுதான். முத்து ஒரு பெரிய பிஸினஸ்மேன், கொள்ளைப் பணக்கா ரன், தெரியுமா? ' என்ருன் ரமணன், " அப்படியா ! எனக்கு யாரைப்பத்தியுமே தெரியாது. நீ ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன்னு கூட அன்னிக்கு நீ சொல்ற வரைக்கும் எனக்குத் தெரியாதுன்ன பாரேன் !' என்று கூறித் தன் அறியாமைக்குத் தானே சிரித்துக்கொண்டான் கோபி. வெகுநேரம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனல் மகாத்மாவைப் பற்றிய ஒரு சொல் கூட கோபியின் வாயிலிருந்து வரவில்லை. அந்த அறையில் அவருடைய ஒரு படம் கூட மாட்டப்படவில்லை என்பதையும் முத்து கவனித்தான். ' உங்க ரெண்டுபேருக்கும் சாப்பிட ஏதாவது... ?’’ சாப்பிட்டுத்தான் வந்தோம். கொஞ்சம் தண்ணி மட்டும் கொடு, தாகமாயிருக்கு ' என்ருன் முத்து . கோபி எழுந்து உள்ளே சென்றுவிட்டு வந்தான். கொண்டு வரச்சொல்லியிருக்கேன்... அப்புறம் என்ன சங்கதி? டே, இன்னிக்கு உங்க ரெண்டு பேரையும் இப்படி என் வீட்டில் வர வேற்பேன்னு நான் நினைக்கவேயில்லைடா ' நண்பனைப் பார்த்து விரிந்த முத்துவின் புன்னகை சட் டென்று நின்றது. உள்ளேயிருந்து வந்த ஒரு பெண் தன் கையிலிருந்த நீர் நிறைந்த தம்ளரை அவர்கள் முன் மேஜை மேல் வைத்தாள். இவள்தான் மிருணுளினி, என் மனைவி ' என்ருன் கோபி. முத்து பேச இயலாமல் அப் பெண்ணேப் பார்த்துக்கொண்டே கல்லாய் அமர்ந்துவிட்டான். தலைமுடி சற்று வெளுத்திருந்ததே தவிர அவள் முகம் மாறவில்லை. அந்த முகத்தை மறக்கமுடி யுமா? அவலத்துக்கு ஒரு கண்ணுடிபோல அவள் பிரமித்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவாறு இதயம் பயங்கரத்தில் உறைந்துபோனவளுகத் தான் நின்றிருந்ததைத்தான் மறக்க முடியுமா ? - * - &m — 16