பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 உள்ளும் புறமும் தன்னையும் ரமணனயும் போன்ருேரின் உலகத்தை மகாத் தான தரிசனம் ஒன்று உலுக்கிப் பிளந்துவிட்ட அதிர்ச்சியில் அவன் வெறும் கண்ணுய், மனமாய், உணர்ச்சியாய், உயிராய், நோக்கியவாறிருந்தான். முத்துவின் பர்ர்வையில் இதயம்.சுரந்து வந்து ததும்பியது. துடிக்கும் இதழ்களுடன் தன் விழிகளே அவளிடமிருந்து அகற்றிக் கோபியின்மேல் பதித்தான். எழுந்து அப்படியே அவன் காலில் விழவேண்டும்போலிருந் தது. இருகரங்களாலும் அவனைத் தழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அவன் மார்பில் புதைத்துக்கொண்டு குழந்தை போல் விம்மியழுது ஆறுதலுற வேண்டும் போலிருந்தது. என் நாட்டின் ஆத்மா அழியவில்லை ! என்று எக்காளமிடவேண்டும் போல் இருந்தது: கோபி. கோபி... அவன் மகாத்மாவைப் பற்றி எழுதவில்லை, சொற்பொழிவு கள் நிகழ்த்தவில்லை, பேச்சில் கூட அவரைக் குறிப்பிடவில்லை. இன்முகத்துடன் கம்பீரமாய் அருகில் மிருணுளினியுடன் வாய்பேசாது நின்றுகொண்டுதான் இருந்தான். ஒளி " என்னைப் பார் ' என்று சொல்வதில்லை. அது உதிக் கிறது, நாம் பார்க்கிருேம், நம் பார்வை தெளிவுறுகிறது. அதன் உதயமே அதன் விளக்கம். அந்த விளக்கத்தில், திடீரென்று மகாத்மாவின் அருட் புன்னகை அங்கு உயிர்கொண்டு பளீரிடுவதை உணர்ந்து உள்ளம் சிலிர்த்தபோது முத்துவும் பேசவில்லை.