பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'லோமாஸ்' 23 விமோசனம் அங்கயற்கண்ணி அசையாமல் கற்சிலை மாதிரி தெருக் கோடியைப் பார்த்தவண்ணம் வாசலில் உட்கார்ந்திருந்தாள்: சூரியன் அஸ்தமனம் ஆகி மாலை வெளிச்சமும் மங்கிக்கொண்டே வந்தது. வெளிச்சம் குறையக் குறைய அவள் மனத்திலும் நம்பிக்கை யென்னும் வெளிச்சமும் குன்ற ஆரம்பித்தது. காரணம் வேலைக்குப் போன அவள் புருஷன் வெகு நேரம் ஆகி யும் வீடு திரும்பாதது தான். அவள் புருஷன் துரைசாமியோடு ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டனர். ஆனல் துரைசாமியை மட்டும் காணவில்லை. அங்கயற்கண்ணியின் கண்களில் நீர் மல்கியது. ஒரு வேளை மறுபடியும்...... சீ அப்படியும் இருக்குமா? பின்னே இவ்வளவு நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராத * .لم * يو هد % காரணம் ? ' - இந்த நினைப்பு ஒட்டத்தில் எல்லையற்ற தூரம் பிரயாணம் செய்த அங்கயற்கண்ணி தன் நினைவற்ற சிந்தேைலாகத்தை அடைந்தாள், - துரைசாமி ஓர் ஆலைத் தொழிலாளி. அவன் வீடு திரும்பும் நேரம் நெருங்கும் சமயத்தில், வீட்டு வாசலில் ஆவல் நிறைந்த கண்களோடு அவனுடைய அருமை மனைவி அங்கயற்கண்ணி