பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 விமோசனம் காத்து நிற்பாள். அவனும் அடங்காத ஆர்வத்துடன், தன் வழி மேல் விழி வைத்து நிற்கும் அங்கயற்கண்ணியையே பார்த் துக் கொண்டு வருவான். துரைசாமியின் சொற்ப சம்பளத்தைக் கொண்டு அங்கயற் கண்ணி மிகவும் சாமர்த்தியமாகக் குடித்தனத்தை நடத்திவந் தாள். துரைசாமி வீட்டுக் கவலையேயில்லாமல் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்து வந்தான். இத்தகைய எளிய வாழ்க்கையிலும் அவர்கள் எவ்வளவு ஆனந்தமாய் இருந்தார்கள் ! துரைசாமி தன் குடும்ப நிலையையும் பொருட்படுத்தாமல் குழந்தை முருகன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அவனைத் தன் கண்ணுக்குக் கண்ணுக வளர்த்து வந்தான். முருகனே நல்ல பையனுக, புத்திசாலிப் பையனுக, வளர்க்க வேண்டும் என்பது அவனது அத்யந்த ஆசை. அவனுக்குத்தான் சின்ன வயதில் படிக்க முடியாமல் போய்விட்டது. முருகனவது படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதில் அவனுக்கு இருந்த ஆசை கொஞ்ச நஞ்சமல்ல. முருகனுக்குப் பத்து வயது ஆயிற்று. படிப்பில் மிகவும் அக்கரையுள்ளவகை விளங்கினன் முருகன். அவனுடைய நல்ல குணங்களைப் பற்றித் தன் நண்பர்கள் புகழ்ந்து பேசுவதைக் கேட்கும்போது துரைசாமி பூரித்துப் போவான். அங்கயற்கண்ணிக்கும் இது ஆனந்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களது ஆனந்த வாழ்க்கை ஆண்டவனுக்கே பொறுக்க வில்லை போலும். குது.ாகலமாகச் சென்று கொண்டிருந்த அவர் களது வாழ்க்கைப் படகு நாளடைவில் தத்தளிக்க ஆரம்பித் தது. காரணம் துரைசாமி தன் குடும்பத்தினிடம் காட்டி வந்த அக்கறை குறைய ஆரம்பித்ததுதான். துரைசாமியின் இந்த விபரீதப் போக்கு வரவர அதிகமாகி வந்தது. ஆலையை விட்டவுடன் முன்பெல்லாம் நேரே வீட்டுக்கு வந்துகொண்டிருந்த துரைசாமிக்கு இப்போது வழியில் எவ்வ ளவோ காரியங்கள் இருந்தன. இரவு நேரங் கழித்துத்தான் அவனல் வீட்டுக்கு வர முடிந்தது. > முன்பெல்லாம் துரைசாமி அன்பும் ஆதரவும் நிறைந்த குரலில் அங்கயற்கண்ணியையும் முருகனையும். அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைவான். அதற்கு நேர்மாருக இப்பொழுது குனிந்த தலைநிமிராமல் விர்ரென்று உள்ளே நுழைந்தான். அவன் யாருடனும் ஒரு வார்த்தைகூடப் பேசு வதில்லை. சதா சர்வ காலமும் அவன் முகத்தில் வெறுப்பும்