பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸோமாஸ் 24 5 ஆத்திரமும் தாண்டவமாடின. உடம்பும் வரவர இளைத்துக் கொண்டே வந்தது. வீட்டுச் செலவுக்காக அங்கயற்கண்ணியிடம் கொடுக்கும் தொகையையும் அவன் வரவரக் குறைத்துக் கொண்டே வந் தான். கடைசியில் பணம் கொடுப்பதையே நிறுத்திவிட்டான்: இதனால் அங்கயற்கண்ணி அரும்பாடுபடவேண்டி வந்தது; குடும்ப நிர்வாகப் பொறுப்பு முழுவதும் அவள் தலையில் விழுந்தது; நாலு வீட்டில் வேலை செய்தும், ஆலைத் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்றும் குடும்பத்தை நடத்த வேண்டி வந்தது. தன் குடும்பம் இவ்வளவு சீர்கேடான நிலையை அடைந்த தும் அவள் தன் புருஷன் மீது ஆத்திரம் கொள்ளவில்லை; அது தாயமே கொண்டாள். அவனுக்கு உடம்பு சரியில்லாததல்ை தான் இப்படியெல்லாம் நடந்து கொள்ளுவதாக அவள் நினைத் தாள். 兴 못 爱 ஒரு நாள் துரைசாமி முருகனுக்கு ஒரு கண்டிப்பான கட்டளை இட்டான். ஊருக்கு வடக்குக் கோடிப் பக்கம் எந்தக் காரணம் கொண்டும் அவன் போகக் கூடாது என்பதுதான் அக் கட்டளை. ஏற்கெனவே பயந்த சுபாவமுள்ள முருகனுக்கு இம்மாதிரிக் கட்டளையும் பிறப்பித்து விட்டால் கேட்கவா வேண்டும் ? இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் துரைசாமியின் புத்தி மாருட்டத்துக்குக் காரணம் ஏதாவது தெய்வக் குற்றமாயிருக் குமோ என்று நினைத்து, அங்கயற்கண்ணி மாரியாத்தாளுக்குப் பொங்கலிட்டுப் பூசையும் போட்டாள். அக்கம் பக்கத்திலுள்ள பெண்களுக்கெல்லாம் அங்கயற் கண்ணியிடம் அளவு கடந்த அநுதாபம் உண்டாயிற்று. புருஷ னின் வழி தவறின நடத்தையின் உண்மையை அறியாத அவளது கள்ளங்கபடமற்ற சுபாவம் அவர்களுக்கெல்லாம் ஆச்சரி யத்தை அளித்தது. ஆளுல் துரைசாமியின் புத்தி மாருட்டத்துக்கு உண்மை யான காரணம் இன்னதென்பதை அவளிடம் சொல்ல ஒருவரும் துணியவில்லை. அப்படியே அவர்கள் சொல்லியிருந்தாலும் அவள் நம்பியிருக்கமாட்டாள். புருஷனிடம் அவ்வளவு நம் பிக்கை அவளுக்கு. ஆனல் அந்த நம்பிக்கைக் கோட்டை அன்று மாலேயே தகர்ந்துவிட்டது. அப்பொழுது ஆறு மணியிருக்கும் துரை