பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 விமோசனம் சாமியும் அவன் நண்பனும் ஏதோ பேசிக்கொண்டே வீட்டு வாசலுக்கு வந்தனர். துரைசாமியின் நண்பன் உரத்த குரலில், நாக் குழற ' ஏய் துரைசாமி! நான் தாஜ்மஹாலை வாங்கப் போறேண்டா ' என்ருன், அதற்குத் துரைசாமி, "" போடா, முட்டாள் ! நான் அதை விற்கப்போகிறதில்லை ! என்று உளறிக் கொட்டினன். இதைக் கேட்ட அங்கயர்கண்ணிக்குத் திகீர் ' என்றது. இந்தக் கொடிய பழக்கத்துக்கு நீங்கள் எப்படி ஆளானிர்கள் ? கள்ளுக் குடிப்பது மகா பாவமில்லையா? நேற்றுக்கூட அந்தக் காங்கிரஸ்காரர் அப்படித்தானே பிரசங்கத்திலே சொன்னர் ? ' என்று கண்ணிர் பெருகக் கேட்டாள் அங்கயற்கண்ணி. துரைசாமி ஒரு அட்டகாசச் சிரிப்புச் சிரித்துவிட்டு, ' அவன் கிடக்கிருன், முட்டாள் ! குடி வெறியிலே அப்படிப் பேத்தி யிருப்பான் ! அதை நீ பெரிசாச் சொல்ல வந்துட்டியே! ' என்று சொல்லிக் கொண்டே நிற்கமுடியாமல் கீழே விழுந்து விட்டான். - இந்தச் சமயத்தில் வெளியே சென்றிருந்த முருகன் ஒடோ டியும் உள்ளே வந்து, “ அம்மா, அம்மா ! இன்றைய தினம் நம்ம தெருப் பையன்களோடு நான் விளையாடப் போயிருந் தேன். ஊருக்கு வடக்குக் கோடிக்குப் போய் விளையாடினேம், அப்பா என்னே அந்தப் பக்கம் போகக்கூடாது என்று சொல்லி யிருந்தார். நான் ஆனமட்டும் அங்கே வரமாட்டேன் என்று சொன்னேன். பையன்களெல்லாம் ஒரேயடியாய்ச் சிரிக்க ஆரம் பித்துவிட்டான்கள். அங்கே ஒரு பெரிய கள்ளுக் கடை இருக் கிறது. உங்க அப்பன் தினம் அந்தக் கடைக்குத்தான் வந்து குடிக்கிருன் அது உனக்குத் தெரியக்கூடாது என்று தான் உன்னை இங்கே வரக்கூடாது என்று அவன் சொல்லியிருக்கிருன் என்று ஒரு பையன் சொன்னன். அதற்கேற்ருற்போல் கொஞ்ச நாழிகைக்கெல்லாம் அப்பா கையிலே கள்ளுக் கலயத்தோடு தள்ளாடிக்கொண்டே அங்கு வந்தார். அவரைப் பார்க்க எனக் குப் பயமாயிருந்தது, அம்மா ஒடி வந்து விட்டேன் 1’ என்று விம்மிக்கொண்டே முருகன் சொன்னன், அங்கயற்கண்ணி இதைக் கேட்டதும் இன்னும் கதறி விட்டாள். - குடி மயக்கந் தெளிந்து எழுந்த துரைசாமிக்குத் தன் மகனை யும் மனைவியையும் தலை நிமிர்ந்து பார்க்கவே உள்ளம் கூசியது. முழங்காலைக் கட்டிக்கொண்டு விசித்து விசித்து அழுதான்.