பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லோமாஸ் 2.47 சிறிது நேரத்துக்குப் பிறகு, அவன் அங்கயற்கண்ணி யிடமும் முருகனிடமும் தான் கள்ளுக்கடைப் பக்கமே இனி மேல் போவதில்லையென்று ஆயிரம் சத்தியம் செய்தான். ஆனலும் அங்கயற்கண்ணியின் மனம் சமாதானமடைய வில்லை: அவனைத் தினசரி சந்தேகக் கண்கொண்டே பார்த்து வந்தாள். 安 螯 兴 ÉÉ கிண்ணு, ஏன் இப்படி மாமல்லபுரத்துச் சிலை மாதிரி உட்கார்ந்திருக்கே? ஏன் இந்தக் கண்ணிர்?' என்று சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய துரைசாமி கேட்ட பிறகு தான் அங்கயற் கண்ணி தன் சுய நினைவையடைந்தாள். - உடனே அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு, ஒண்ணு மில்லே, வாங்க வெகு நேரம் ஆகியும் இன்னேக்கு நீங்க வராம இருந்திடவே, எனக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது. மறுபடி யும் ஒரு வேளை நீங்கள் அந்தப் பாழும் கடைப் பக்கம் போய் விட்டீங்களோ என்று தான் 1’ என்ருள்: சீ இனிமேல் அந்தப் பக்கம் போவேன : அப்படியே போவதாயிருந்தாலும் நம்ம ஜில்லாவிலேதான் அடுத்த வாரத் திலே இருந்து கள்ளுக் கடைகளை எல்லாம் மூடிவிடருங்களே ! அதனுலே இனிமே அதைப் பத்தி நீ கொஞ்சம் கூடப் பயப்பட வேண்டாம் ! என்ருன் துரைசாமி உணர்ச்சி ததும்ப. ' எல்லாம் அந்த மவராசன் காந்தி புண்ணியம்; அவரு நல்லாயிருக்கணும் 1’ என்ருள் அங்கயற்கண்ணி, بیبیسی: 0 : بیس.