பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கோமகள்" 24 வந்தே மாதரம் சோமுவின் உள் மனதில் ஊடாடிக் கிடந்த அந்த மா பெரும் உணர்வுகள் கோபமா, துயரமா என்று உருப்புரியாமல் தத்தளித்தன. அவன் படபடப்பாகச் சுமதியின் முகத்தை நோக்கினன். நேர்வழியில் செல்லும் நிதானத்தோடு, கொஞ்சம் கூடத் தட்டுத் தடங்கலின்றி அவள் மிதமான நடையோடு அவனைப் பின் தொடர்ந்தாள். மலர்ந்தும், மலராத, பெண்மை முழுதும் விகசிக்காத தோற்றம். மதர்த்த விழிகளில் ஏக்கத் தேக்கம். ரகசியமாகக் கட்டிக் காத்த உள்ளாசைகளைப் பிறர் உணர்ந்துவிட்ட வேதனையான வெட்கம். ஆனல் ஈடு கொடுத்து எதிர்த்தே தீருவேன் என்ற உறுதியான முகபாவம், வீட்டுக்குள் நுழைந்ததும் இனி நடக்கப் போகும் விஷயங்களைக் கேட்டால் அம்மா எத்தனை அதிர்ச்சி அடைவாள்? தெருவே வெரிச்சோடிக் கிடந்தது. இந்த நீண்ட தெரு வின் தொலைவே தீராமல் வளர்ந்து கொண்டிருந்து விட்டாலும் நல்லதுதான். சோமுவின் கோபக் கனல் பெருகியது. வாய் திறந்து வார்த்தைகளைக் கொட்டி, அவள் உள்ளாசைகளை வெளியில் எடுத்து எறிந்துவிட்டு, அவள் மனதைச் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும் என்ற ஒர் துடிப்பு. சலீம் என்ற துமே உடல் முழுதும் ஒரு ரத்த வெறி பரவுகிறது. அது நேற்று வரை தோன்ருததுதான். ஆனால் மறைந்திருந்த வெறிபோல "சட்டெனப் பற்றிக் கொண்டது. சோமு தன்னை அடக்கிக் கொள்ளத் தூர நோக்கினன். தேசீயக் கொடிகள் கம்பங்கள் மீதெல்லாம் படர்ந்து மகிழ்வால் துடிதுடித்தன. அந்தத் துடிப் பின் லயத்தில் அவன் உடல் முழுவதும் புதிய ஊற்றுணர்ச்சி பரவியது; சந்தேகமில்லாமல் அவன் ஒரு சராசரி மனிதனை