பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமகள் 249 விட, நாட்டுப் பற்று மிகுந்தவன்தான் ! ஆனலும்...விரும் பாததைக் கண்ட நேரத்தில், கேட்ட நேரத்தில் சொந்தமான விருப்பு, வெறுப்புக்களே உதறிவிட்டு அமைதியடைபவன் யார்? சுமதியின் பள்ளியில் கொடியேற்று விழா. பள்ளித்தலைமை மாணவி என்ற முறையில் நாட்டு வணக்கமும், தமிழ்மொழி வணக்கமும் பாடினுள் சுமதி. பிறகு கொடி வணக்கமும், அணி வகுப்புமுறையும் நடந்தன. சுமதியை விழா முடியும் வரை இருந்து அழைத்து வர வேண்டும் என்று சோமு, அம்மா சொன்னபடி வந்திருந்தான். பள்ளி நிர்வாகியின் மகன் என்ற முறையில் சலீமும் மாணவர்கட்கு இனிப்புக்கள் வழங்கின்ை. அடிக்கடி ஏற்பாடு முறைகளைக் குறித்து சுமதியும், சலீமும் பேசிக் கொள்வதைச் சோமு கவனித்தான். அந்தப் பேச்சில், பழகிய நட்பும், ஆழ்ந்த பாசமும், ஒருவரையொருவர் வென்ற சிரிப்பும் தெறிப்பதை உணர்ந்து அவன் திடுக்கிட்டான். சூழ் நிலை தந்த வெறுப்பிற்கு ஈடு கொடுத்துவிட்டு, சுமதியருகே சென்று அம்மா அவசரமாக அழைப்பதாகக் கூறி விழா முடியு முன்பே அழைத்து வந்து விட்டான். சாலையில் சின்னஞ்சிறு சிரு.ர்கள் சுதந்திர மூவர்ணக் கொடி யணிந்து, பெருமிதமான நடையோடு வீடு நோக்கி ஓடினர். இந்தப் பொன்னளை நினைத்து சோமு உடல் சிலிர்த்த நாட்கள் உண்டு, இன்று வெறுப்பின் சிகரமான நிகழ்வுகள் குலை நடுக்கம் காட்டி மிரட்டின. இந்தச் சுமதிக்கு எப்படி விளங்க வைப்பது? இப்படி அண்ணனும், தங்கையும் அரவமில்லாது, வாக்கு வாத மில்லாது நடந்து வருவது. இது முதல் தடவை இந்த அந்நியம் கொடுரமான உள்ளுண்மை! சோமு சட்டெனத் திரும்பிய போது சுமதியின் கைகளில் நழுவிய ஒரு புகைப்படம் தென் பட்டது. அவன் சந்தேகம் புகைப்படத்தைத் தழுவ, மெளன மாகப் படத்திற்குக் கை நீட்டினன் அவன். சுமதி, நடுக்கத்தை யெல்லாம் வாங்கும் கைகளுக்குத் தந்துவிட்டு, சலனமின்றி படத்தைக் கொடுத்தாள் ! மகாத்மா காந்தி ! சட்டென்று மனத்திற்கு ஒரு சவுக்கடி புன்னகையும், எழிலுமாய் அவரின் சிரிப்பு, அவன் சந்தேகத்தின் அர்த்த மின்மைக்கோ ? புத்தரைத் தொழுதுவிட்டு, புலால் உணவு கொள்வதுபோல், காந்தியைப் போற்றிவிட்டு, முகம்மதிய சகோ. தரர்களை வெறுப்பதா? இந்த அர்த்தத்தைக் கற்பிக்கத்தான் சுமதி இதைக் கையில் வைத்திருக்கிருளா? ஆளுலும்...படத்தைத் திருப்பியபோது. மறுபடியும் மாயையாகி மறைந்த கோபம் பீறிட்டது. வெண்மையான வழவழப்பில் பச்சை நிறத்தில் 'நாதிராவுக்கு அன்பளிப்பு-சலீம்' என்ற ஆங்கில வாசகங்