பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 வந்தே மாதரம் கள், சட்டென கைகளுக்குள் சுருள இருந்த புகைப்படத்தை சுமதி பறித்துக் கொண்டாள். அவள் கண்களில் பொங்கும் நீர். அவன் கண்களில் விசுவரூபமாகி நின்ற வெறி. அதை வெல்ல அவள் மெல்ல மொழிந்தாள். ' அது பாபுஜியின் படம் அண்ணு ’’ அவள் குரலில் தொய்ந்து கனிந்த உணர்வு இரக்கமா, ஏக்கமா என்றே அவனுக்குப் புரியவில்லை. ஆனல் அவன் தன்னை உணர்ந்தான். ' சன்மார்க்க நெறி பிறழா, சத்தியப் போர் முனையில் அன்பு சுதந்திரம் கண்ட மகானையா அவமதிக்க இருந்தேன்? அதன் மூலம் நான் என்னையே அவ மானப் படுத்திக் கொள்ள இருந்தேன ? . இந்தச் செயலைத் தடுத்த சுமதியை நன்றியோடு பார்த்தவாறே அவன் மிகவும் சிரமத்துடன் அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டுக் குனிந்தாள். முழுக்கப் பார்க்கத் தெம்பில்லை. தெருவோரம் சிலுசிலுத்த காற்றசைவில், உயர்ந்திருந்த காட்டுத் தீ புஷ்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விழுந்தன. இரத்தமென சிவந்த பூக்கள் சிகப்பு வெல்வெட் படுதாவை விரித்தாற்போல் மிகப் பயங்கரமாகப் பெருகி... ஒடும் ரத்தமாக, தேங்கும் நாற்றமாகப் பரவி, நினைக்கவே நெஞ்சு நடுங்கும் ஒலமாக...இனம் தெரியாத ஊர்தான், அப்பாவுக்கு அங்கு வேலையென்ருல் அம்மாவும், சோமுவும் அங்கு இருக்க வேண்டியதுதானே? ஒரு நாள் அடுத்த வீட்டு முக்கர்ஜி பள்ளிக்கூடத்திற்கு வந்து அவனை அழைத்துப் போனர். பள்ளிக்கூட மணி அடித்தும் கூட அன்று பிள்ளை களை வெளியே விடும் பெரிய கேட்டோ, சின்ன கேட்டோ திறக்கப்படவில்லை. ஒன்றும் புரியாத சிறுவர்கள் தவிக்கும் போது வீட்டிலிருந்து வேண்டியவர்கள் வந்து குழந்தைகளை அழைத்துப் போளுர்கள். அதே போல் தான் முக்கர்ஜி வந்து சோமுவைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். சோமு விற்கு ஆச்சரியம் ! கடைகள் சாத்திக் கிடக்கின்றன, அங் காடிகள் சிதறிக் கிடக்கின்றன. வீடெல்லாம் திறந்து கிடக் கின்றன. நீள் நோக்கு வரையும் புகையும், மனித ஒலமும், தீயுமாக ஒரு பயங்கரச் சித்திரம் மனிதப் பூண்டே ஏதோ அழிக்கும் வெறிக்குப் பயந்து ஒடுங்கிவிட்ட நிலை முக்கர்ஜி யின் கண்களில் நீர் கொட்டுகிறது. சோமு அவர் கண் mைரைத் துடைக்கிருன். அவர் 'கோ'வென்று கதறி ' உன் அப்பாவைக் கொன்று விட்டார்களடா’ என்று துடித்தார். சோமுவிற்கு எதுவும் புரியவில்லை. அவன் ' அப்பா ’’ என்று அலறிஞன். இதைப் போன்ற ஆயிரம் குரல்கள் அன்று ஒலித்தன. -